என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும்பாட்டை கண்டித்து தி.மு.க கண்டன பொதுகூட்டம் நகர கழக செயலாளர் ச. நரேந்திரன் தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது.
நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
மாநில தீர்மான குழு செயலாளர் கோ.வி.செழியன் எம்.எல்.ஏ காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நகரமன்ற தலைவர் அன்புச் செல்வன், மாவட்ட பொறியாளர் அணி திருவள்ளுவன், மாவட்ட மகளிர் அணி சந்தியா, மீரா சபாபதி, கலாவதி மூர்த்தி, மற்றும் செங்கல்பட்டு நகரமன்ற உறுப்பினர்கள், கிளை கழக செயலாளர்பிரநிதிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மகளிர் அணியினர், கலந்து கொண்டனர்.
தாம்பரம் அடுத்த சானிடோரியம் லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர் சென்னை விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுதல், இறக்குதல் பிரிவில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புனிதவதி.
கணவர்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து புனிதவதி தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து ராஜபாண்டியிடம் இன்ஸ்பெக்டர் நசீமா விசாரணை நடத்தினார். அப்போது இன்ஸ்பெக்டர் நசீமாவிடம் ராஜபாண்டி தகராறு செய்து அவரை தாக்கி கீழே தள்ளி விட்டார்.
இதை பார்த்த மற்ற போலீசார் ராஜபாண்டியை மடக்கி பிடித்தனர். அவர் மீது அரசு ஊழியரை தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
விழுப்புரம்-எழும்பூர் நோக்கி வரக்கூடிய பாதையில் ஏற்பட்ட திடீர் விரிசல் குறித்து செங்கல்பட்டு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மதுரையில் இருந்து எழும்பூர் நோக்கி பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. விரிசல் குறித்து என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த ரெயில் ஒத்திவாக்கம் அருகில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த முத்துநகர், ராமேஸ்வரம், சேது, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.
தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் 6 மணி முதல் ஈடுபட்டனர். அதனை சரி செய்ய 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் 8 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற ரெயில்களும் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.
தண்டவாளம் விரிசல் காரணமாக பாண்டியன் உள்ளிட்ட 4 ரெயில்களும் 2 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
தாம்பரத்தை அடுத்த காமராஜபுரம், காயத்ரி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அரவிந்தகுமார். கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. கடந்த 21-ந் தேதி அரவிந்த் குமார் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மாணவர் அரவிந்த் குமாருடன் அவர் படித்த கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்க்கும் 23-வயது பெண்ணும் ஓட்டம் பிடித்ததும், போலீசார் தேடுவதை அறிந்ததும் பேராசிரியை மட்டும் வீட்டுக்கு திரும்பி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து கணவர்- மற்றும் 2 குழந்தையுடன் வாழும் பேராசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பேராசிரியை அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
அரவிந்த் குமார் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்க அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். அப்போது எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு அரவிந்த் குமார் “நாம் இருவரும் வீட்டை விட்டு தனியாக சென்று புதிய வாழ்க்கை தொடங்கலாம். உன்னுடன் வாழ முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று மிரட்டி அடிக்கடி தொல்லை கொடுத்தான்.
எனவே அரவிந்த்குமாரை ஏதாவது ஊருக்கு அழைத்து சென்று மனதை மாற்றி அழைத்து வரலாம் என்று முடிவு செய்தேன்.
கல்லூரியில் இருந்து சுற்றுலா செல்வதாக கூறி புறப்பட்டோம். ரூ.1½ லட்சம் பணம், மற்றும் நகைகள் வைத்து இருந்தேன்.
முதலில் பாண்டிச்சேரிக்கு சென்றோம். பின்னர் மதுரை, தூத்துக்குடிக்கு சென்றோம். அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.
கணவர் மற்றும் குழந்தைகள் ஞாபகம் வந்ததால் சென்னைக்கு செல்லலாம் என்று அரவிந்த்குமாரிடம் கூறினேன். அவனும் சரி எனக்கூறினான்.
19-ந்தேதி திண்டிவனம் அருகே ஒரு ஓட்டலில் சப்ளையரிடம் செல்போன் வாங்கி எனது அம்மாவிடம் பேசினேன். அப்போது என்னை காணவில்லை என்று கணவர் போலீசில் புகார் செய்து இருப்பது தெரிந்தது.
இது பற்றி அரவிந்த் குமாரிடம் கூறிய போது “நான் இப்போது வந்தால் அவமானமாக இருக்கும், 2 நாட்கள் கழித்து வருகிறேன் என்றான்.
இதையடுத்து அவனிடம் ரூ.5 ஆயிரம் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.
இவ்வாறு அவர்கூறி உள்ளார்.
இது குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாரிடம் கேட்ட போது, அரவிந்த்குமாரை பேராசிரியை தற்கொலைக்கு தூண்டினாரா? அல்லது அவமானத்தில் அவரே தற்கொலை செய்தாரா என்று விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக அரவிந்த் குமாருடன் படிக்கும் மாணவர் மற்றும் முன்னாள் மாணவரிடமும் விசாரணை நடக்கிறது.
விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
காஞ்சிபுரம்:
திருவள்ளூரை அடுத்த கீழ்நல்லாத்தூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் பிரகாஷ் (வயது 23). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் காஞ்சிபுரத்தை அடுத்த முகரவாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வேலைக்கு சென்ற பிரகாஷ் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் தலையில் வெட்டுக் காயத்துடன் பிரகாஷ் இறந்து கிடந்தார்.தகவல் அறிந்ததும் பாலுசெட்டிசத்திரம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரகாஷ் கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. பெண் தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக பிரகாசுடன் நெருங்கி பழகியவர்கள் யார்? யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.
பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் அன்புமணி இடைமறிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இடைமறிப்பது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. வரன் முறைகளுக்கு உட்பட்டு கண்டனத்தையோ கருத்துக்களையோ பதிவு செய்ய வேண்டும்.
வரம்பு மீறிய விமர்சனங்கள் குறித்து வழக்கு போடுவது வழக்கம்தான். ஆனால் எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது சரியல்ல.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தமிழக விவசாயிகள் சென்று சந்தித்தது தவறு. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரசே காரணம்.
நதிநீர் பிரச்சனையில் இரு மாநிலங்களிடையே சுமூக தீர்வு ஏற்படுத்துவதற்கு பா.ஜனதா முயற்சி எடுத்து வருகிறது. காவிரி பிரச்சனையை தீர்க்க தமிழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேர் காய்ச்சலில் இறந்துள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படை காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சலுக்கு சிலர்தான் பலியாகி உள்ளனர் என்று அமைச்சர் கூறுகிறார். உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரப்பாக்கம் டீ கடை பஸ் நிலையம் அருகே இன்று காலை விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு 70 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனகை முருகேசன் கட்சி கொடி ஏற்ற அங்கு வந்தார். அப்போது கொடி கம்பம் சிறிது சாய்ந்து இருந்தது.
அதனை நிமிர்த்த கட்சி நிர்வாகிகள் முயன்றனர். இதில் அருகில் இருந்த மின் வயரில் கொடி கம்பம் சாய்ந்தது.
மின்சாரம் பாய்ந்ததில் கொடி கம்பத்தை பிடித்து இருந்த கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.மூர்த்தி, ராஜேஷ், மகேந்திரன், சுதாகர், கேசவன், அனு ஆகிய 6 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதை பார்த்து கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மின்சாரம் தாக்கிய 6 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் மங்கள விநாயகர் கோவில்தெருவில் வசித்து வருபவர் மோகன். இவரது மனைவி கனி. திரிசூலம் ஊராட்சி 6-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார்.
அதே பகுதி பஜனை கோவில் தெருவில் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாய் உடைந்தது. தண்ணீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை கவுன்சிலரின் கணவர் மோகன் கண்டித்து குடிநீர் தொட்டி ஆபரேட்டர் பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடைந்த பைப்பை உடனடியாக சரிசெய்யாதது ஏன்? என்றும் கேட்டார்.
இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மோகன், பாபுவை தாக்கினார்.
இது குறித்து பாபு, பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்வதற்காக இன்று காலையில் விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி நதி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதைப் பற்றி கவலைப்படவில்லை. கடிதம் மட்டும் எழுதி இருக்கிறார். ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
தி.மு.க. விவசாய அணி மற்றும் சில குழுக்கள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யாவை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில் 23 வயதான இளம்பெண் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
ரெயில்வேயில் என்ஜினீயராக பணியாற்றிய இவரது கணவர் இறந்ததையடுத்து அவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இரவில் சிங்கப்பெருமாள்கோவில் ரெயில் நிலைய தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து 47-வது எண் கேட் அருகே சிக்னல் கோளாறை சரி செய்ய பெண் ஊழியர் மட்டும் சென்றார்.
அவர் சிக்னலை சரிசெய்து நடந்து வந்தபோது முட்புதரில் மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென வழிமறித்தனர். அவர்கள் பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆட்கள் வருவதை பார்த்ததும் மர்ம கும்பல் பெண் ஊழியரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெண் ஊழியர் ரெயில்வே அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் ரெயில்வே ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் (20) இவர் மீது துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோலிங்கநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது. வழக்கு விசாரணைக்காக துரைப்பாக்கம் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் துரைப்பாக்கம் போலீசார் பஸ் நிலையம், அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அற்புதராஜ் அங்கு வந்தார் உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். ஆனால் அற்புத ராஜ் போலீசாரின் கையை தட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த சூறைகாற்றுடன் சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது, இதில் கடம்பாடி, மணமை, வடகடம்பாடி, குளிப்பாந்தன்டலம், பெருமாள் ஏரி பகுதிகளில் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்தன. மாமல்லபுரத்தில் சாலையோரத்தில் இருந்த ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது.
ஒத்தவாடைதெரு, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம், கிழக்குராஜ வீதி பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. ஸ்தலசயண பெருமாள் கோவில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.






