என் மலர்
செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவிலில் ரெயில்வே பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை
சிங்கப்பெருமாள் கோவிலில் ரெயில்வே பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையத்தில் 23 வயதான இளம்பெண் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
ரெயில்வேயில் என்ஜினீயராக பணியாற்றிய இவரது கணவர் இறந்ததையடுத்து அவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இரவில் சிங்கப்பெருமாள்கோவில் ரெயில் நிலைய தண்டவாளத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து 47-வது எண் கேட் அருகே சிக்னல் கோளாறை சரி செய்ய பெண் ஊழியர் மட்டும் சென்றார்.
அவர் சிக்னலை சரிசெய்து நடந்து வந்தபோது முட்புதரில் மறைந்திருந்த மர்ம கும்பல் திடீரென வழிமறித்தனர். அவர்கள் பெண் ஊழியரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆட்கள் வருவதை பார்த்ததும் மர்ம கும்பல் பெண் ஊழியரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெண் ஊழியர் ரெயில்வே அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் ரெயில்வே ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story