என் மலர்
செய்திகள்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் தமிழிசை பேட்டி
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் அன்புமணி இடைமறிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இடைமறிப்பது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. வரன் முறைகளுக்கு உட்பட்டு கண்டனத்தையோ கருத்துக்களையோ பதிவு செய்ய வேண்டும்.
வரம்பு மீறிய விமர்சனங்கள் குறித்து வழக்கு போடுவது வழக்கம்தான். ஆனால் எதற்கெடுத்தாலும் வழக்கு போடுவது சரியல்ல.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தமிழக விவசாயிகள் சென்று சந்தித்தது தவறு. காவிரி பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரசே காரணம்.
நதிநீர் பிரச்சனையில் இரு மாநிலங்களிடையே சுமூக தீர்வு ஏற்படுத்துவதற்கு பா.ஜனதா முயற்சி எடுத்து வருகிறது. காவிரி பிரச்சனையை தீர்க்க தமிழகத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் 4 பேர் காய்ச்சலில் இறந்துள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படை காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சலுக்கு சிலர்தான் பலியாகி உள்ளனர் என்று அமைச்சர் கூறுகிறார். உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story