என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
    X

    காவிரி பிரச்சனை: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி

    காவிரி நதி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்வதற்காக இன்று காலையில் விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி நதி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதைப் பற்றி கவலைப்படவில்லை. கடிதம் மட்டும் எழுதி இருக்கிறார். ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

    தி.மு.க. விவசாய அணி மற்றும் சில குழுக்கள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யாவை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×