என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோந்து பணியின் போது போலீசில் சிக்கிய செல்போன் கொள்ளையன் தப்பி ஓட்டம்
    X

    ரோந்து பணியின் போது போலீசில் சிக்கிய செல்போன் கொள்ளையன் தப்பி ஓட்டம்

    துரைப்பாக்கத்தில் ரோந்து பணியின் போது போலீசில் சிக்கிய செல்போன் கொள்ளையன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் (20) இவர் மீது துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோலிங்கநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது. வழக்கு விசாரணைக்காக துரைப்பாக்கம் போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் துரைப்பாக்கம் போலீசார் பஸ் நிலையம், அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அற்புதராஜ் அங்கு வந்தார் உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். ஆனால் அற்புத ராஜ் போலீசாரின் கையை தட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×