என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊராட்சி ஊழியர் மீது தாக்குதல்: கவுன்சிலரின் கணவர் கைது
    X

    ஊராட்சி ஊழியர் மீது தாக்குதல்: கவுன்சிலரின் கணவர் கைது

    ஊராட்சி ஊழியர் தாக்குதலில் கவுன்சிலரின் கணவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் மங்கள விநாயகர் கோவில்தெருவில் வசித்து வருபவர் மோகன். இவரது மனைவி கனி. திரிசூலம் ஊராட்சி 6-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார்.

    அதே பகுதி பஜனை கோவில் தெருவில் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது குடிநீர் குழாய் உடைந்தது. தண்ணீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனை கவுன்சிலரின் கணவர் மோகன் கண்டித்து குடிநீர் தொட்டி ஆபரேட்டர் பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடைந்த பைப்பை உடனடியாக சரிசெய்யாதது ஏன்? என்றும் கேட்டார்.

    இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மோகன், பாபுவை தாக்கினார்.

    இது குறித்து பாபு, பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.
    Next Story
    ×