என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் காஞ்சீபுரத்தில் நெசவு தொழில் முடங்கியது.
    காஞ்சீபுரம்:

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், பணம் எடுக்கவும் பொதுமக்கள் வங்கி, ஏ.டி.எம்.கள் முன்பு காத்து கிடக்கும் நிலை உள்ளது.

    பணப்புழக்கம் குறைந்ததால் பட்டுச்சேலை விற்பனை முற்றிலும் முடங்கி உள்ளது. பல கோடி பட்டுச்சேலைகள் தேங்கி உள்ளது. காஞ்சீபுரம் காந்திசாலை, மேட்டு தெரு, சேக்குபேட்டை நடுத்தெரு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான பட்டுசேலை விற்பனை கடைகளில் நடைபெறும்.

    இங்கு தினம்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டினர் உள்ளிட்ட பல்லாயிரம் கணக்கானோர் பட்டு சேலைகளை வாங்கி செல்வர்.

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் பட்டு சேலை விற்பனை கடும் சரிவினை சந்தித்துள்ளது. இது குறித்து பட்டுச்சேலை வியாபாரி ஒருவர் கூறும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாத நிலையில் கூட்டுறவு சங்கங்களில் அவற்றினை வாங்குவது இல்லை.

    பட்டுசேலை வாங்க வருபவர்கள் பல ஆயிரக் கணக்கான ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் பெரும்பாலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாகவே கொண்டு வருகின்றனர். இதனால் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை மிகவும் குறைந்தது.

    காஞ்சீபுரத்தின் முன்னணி பட்டு கூட்டுறவு சங்கங்களில் நாள் ஒன்றுக்கு சராசரி விற்பனை 1 கோடிக்கு மேல் இருக்கிறது. தற்போது சராசரி விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் பட்டுசேலைகள் கூட்டுறவு சங்கங்களில் தேக்கம் அடைந்துள்ளது. நெசவாளர்களுக்கும் வேலை அளிப்பு குறைந்துள்ளதால் அவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு கூலியாக இப்போது பணத்திற்கு பதில் காசோலையாக அளிக்கப்படுகிறது. பெரும் பான்மையான நெசவாளர்கள் போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள்.

    வங்கி நடைமுறைகள் குறித்து அறியாத அவர்களிடம் நாங்கள் உடனிருந்து பணத்தினை மாற்றி தருகிறோம். எங்களுக்கு குறிப்பிட்ட தொகையை தந்துவிடுங்கள் என்று கூறி சில தரகர்கள் நூதன முறையில் பணம் பறிக்கின்றனர்‘ என்றார்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம் மற்றும் கேமிரா கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பென்னாலூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். இன்று காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக ரமேசுக்கு தகவல் வந்தது.

    உடனே இவர் டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம், ரூ.1000 மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை போய் இருந்தது.

    மேலும் அருகில் உள்ள டாஸ்மாக் பார் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    நேற்று டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.2½ லட் சத்தை ஒரு காலி அட்டை பெட்டியில் வைத்து இருந்ததால் அது கொள்ளையர்கள் கண்ணில் சிக்காமல் தப்பியது

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் சிரமப்படுவதை கண்டித்து காஞ்சீபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதனை மாற்ற வங்கிகள் முன்பு குவிந்து வருகிறார்கள். ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    பொதுமக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்திருந்தார்.

    அதன்படி காஞ்சீபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே நகர தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, அவலூர் சீனிவாசன், லோகநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வங்கி எதிரே காங்கிரஸ் பிரமுகரும் சமூக ஆர்வலருமான தாமோதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் சி.ஆர்.பெருமாள், உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற பொது மக்களுக்கு காலை உணவு, டீ தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கினர்.
    ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து தாம்பரத்தில் உள்ள வங்கியை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தாம்பரம்:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்கவும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரசார் இன்று வங்கிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் சிவராமன் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், வங்கிகளில் பொதுமக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கியை முற்றுகையிட போலீசார் தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து சிவராமன் உள்பட 300 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள  தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக இடைத்தேர்தலில் வாக்களித்தவர்கள் சதவீதம் அதிகரித்து இருப்பது ஒரு ஆரோக்கியமான முடிவுக்கு வழிவகுக்கும். இடைத்தேர்தலில் செல்லாத பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா கொண்டு நடந்த கடைசி தேர்தலாக இது இருக்க வேண்டும்.

    இனி மக்கள் யாரும் பணத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். எல்லோருடைய வாழ்க்கையிலும் டிசம்பர் 30-ந் தேதிக்கு பிறகு நல்லது நடக்கும். கெட்ட ரத்தமான கள்ள பணத்தை ஒழிக்கவில்லை என்றால் இந்தியா உயிரற்ற நாடாக மாறி இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    திருமாவளவன் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கட்டும். மக்கள் அதை கவனிக்கவில்லை. இலங்கை தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தை மறந்துவிட்டு காங்கிரசுடன் திருமாவளவன் பேசுகிறார். பணம் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    மக்கள் இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் மத்திய அரசின் திட்டத்துக்கு ஆதரவு தந்து வருகின்றனர். வங்கிகளில் வழக்கமான நடைமுறைகள் வந்துவிட்டன. ரூ.500 நோட்டுகள் வந்து சில்லரை தட்டுப்பாடு சீரானதும் இப்போது உள்ள குழப்பங்களும் மறைந்துவிடும்.

    ஏழை மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஆட்சியை பிரதமர் மோடி நடத்திக்கொண்டு இருக்கிறார். மாற்றங்கள் கொண்டு வரும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதை மக்கள் புரிந்து உள்ளனர்.

    டிசம்பர் 30-ந் தேதி வரை பணத்தை மாற்றலாம். எனவே யாரும் பதற்றமடைய வேண்டாம். கருப்பு பணத்தை ஒழிக்க மோடி கொண்டு வந்த இந்த திட்டம், ஏழைகளை பணக்காரர்கள் ஆக்கும். பல நாடுகளில் இதுபோல் திட்டம் வராதா? என ஏங்குகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது முதியவரிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் சவரியார் தெருவைச் சேர்ந்தவர் குமார் (62). இவர் இன்று காலை ஆதம்பாக்கம் கருணிகர் தெருவில் உள்ள அரசு வங்கியில் பணம் எடுக்க வந்தார்.

    அவர் வரிசையில் நின்ற போது கைப்பையில் வைத்து இருந்த ரூ.19,500யை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள்-பஸ் மோதலில் மேஸ்திரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    கோவிலம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (46) கட்டிட மேஸ்திரி ஆக இருந்தார். நேற்று மாலை அவர் மடிப்பாக்கம் கூட்டு ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கீழ்கட்டளையில் இருந்து பிராட்வே வந்த அரசு டவுன் பஸ் மோதியது.

    இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்டிரைவர் ராஜேஷ் (44) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

    வாலாஜாபாத் அருகே சிவன் கோவிலில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள திம்மராஜ பேட்டையில் ராமலிங்கேஸ்வரர் எனப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் காஞ்சீபுரம் - வாலாஜாபாத் சாலையில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உற்சவர் இருக்கும் மண்டபத்தில் தனி அறையில் 21 ஐம்பொன் சிலைகள், தங்க நகைகள், வெள்ளி திருவாரணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. கோவிலில் கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு அலாரமும் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு பூஜை முடிந்த பிறகு பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார். நள்ளிரவில் கொள்ளையர்கள் ஏணி மூலம் சுவர் ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் கோவில் அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமராவை துண்டித்தனர்.

    கோவில் மண்டபத்தில் உள்ள 4 பூட்டுக்களை உடைத்து உள்ளே புகுந்தனர். ஐம்பொன் சிலைகள் மற்றும் நகைகள் இருக்கும் அறைக்கதவு பூட்டை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதையடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பால் இலங்கை பெண் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை இலங்கை புறப்பட்ட விமானம் தயாராக இருந்தது. அதில் செல்லும் பயணிகள் ஓய்வு அறையில் இருந்த போது இலங்கையை சேர்ந்த விஜயகோடி அரசாட்சி (வயது 70) திடீரென மயங்கினார்.

    விமான நிலைய மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் மாரடைப்பால் இறந்திருப்பது தெரிந்தது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர், நிருபர் களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு உரிய நிதிகளை அனுப்பிய பிறகும் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்காமல் தற்போது குறை கூறுவது சரியானதல்ல.

    எந்த காரணத்துக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதோ, அதேபோல் தான் இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடா நடக்கிறது. பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் அதிகமாக பணப்பட்டுவாடா நடக்கிறது. இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இதனால் நம்பிக்கை இழந்துவிட்டது.

    கள்ள ஓட்டை தடுக்க கை விரலில் மை வைப்பது போல், கள்ள பணத்தை தடுக்க மை வைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதற்றமடைவது ஏன்? என புரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கூட்டுறவு வங்கிகள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்று காஞ்சீபுர மாவட்ட கலெக்டரிடம் காங்கிரசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி காஞ்சி நகர தலைவர் ஆர்.வி.குப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஏடிஎம் வங்கி வாசல்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

    பணத்தட்டுப்பாடு காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பில் இருந்து மக்களை மீட்க மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்வதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் மண்டல உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பணப் பரிமாற்றம் எளிய மற்றும் சுமூகமான முறையில் நடைபெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
    ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடையால் ஏற்பட்டுள்ள சில்லரை தட்டுப்பாட்டை கண்டித்து மிகப்பெரிய அளவில் வணிகர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

    மதுராந்தகம், நவ. 16-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா, கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் சிறு வணிகர் முதல் பெரு வணி கர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய வணிகத்தில் மிகப் பெரிய தொகை கையாள வேண்டிய சூழல் உள்ளது.

    வணிகர்கள் வங்கியில் பணத்தை போடுவதற்கும், எடுப்பதற்கும் கூட சுதந் திரமாக இல்லை. ஏற் கனவே, ஆன்லைன் வர்த்தகத் தால் வணிகர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    சில்லரை தட்டுப்பாடு, வங்கி பரிவர்த்தனை குறித்த மாற்று வழிமுறை களை அரசு போர்கால அடிப்படையில் அறிவிக்க வேண்டும்.

    இந்த நிலை தொடர்ந்தால் வணிகர்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைகளின் முடி வுப்படி தமிழ்நாடு முழுக்க மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத் தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் அமல்ராஜ், மாவட்ட செயலாளர் பிரபா கரன், இணைச் செயலாளர் பவித்ரா சீனிவாசன் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

    ×