என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினை - காஞ்சீபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினை - காஞ்சீபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் சிரமப்படுவதை கண்டித்து காஞ்சீபுரத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    காஞ்சீபுரம்:

    ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதனை மாற்ற வங்கிகள் முன்பு குவிந்து வருகிறார்கள். ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    பொதுமக்கள் சிரமப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்திருந்தார்.

    அதன்படி காஞ்சீபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே நகர தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, அவலூர் சீனிவாசன், லோகநாதன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள வங்கி எதிரே காங்கிரஸ் பிரமுகரும் சமூக ஆர்வலருமான தாமோதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதில் சி.ஆர்.பெருமாள், உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற பொது மக்களுக்கு காலை உணவு, டீ தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கினர்.
    Next Story
    ×