என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாம்பரத்தில் வங்கியை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 300 பேர் கைது
தாம்பரம்:
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை போக்கவும், மத்திய அரசை கண்டித்தும் காங்கிரசார் இன்று வங்கிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் சிவராமன் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர் மண்டல காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், வங்கிகளில் பொதுமக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வங்கியை முற்றுகையிட போலீசார் தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து சிவராமன் உள்பட 300 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.