என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரத்தில் புதிதாக திறக்க இருந்த காய்கறி சந்தையில் குறைந்த கடைகளுக்கு அனுமதியளித்ததால் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் செயல்பட்டு வந்த ராஜாஜி மார்க்கெட் மூடப்பட்டு, காஞ்சீபுரம் அருகே வையாவூர் சாலையில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தது.

    அங்கு மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.இதையடுத்து காய்கறி சந்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை நேற்று திறக்கப்படுவதாக இருந்தது.

    ஆனால் இந்த சந்தைக்கு நகராட்சி சார்பில் 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த வியாபாரிகள் அங்கு கடைகளை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை காஞ்சீபுரம் அருகே வையாவூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தில் 325 சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் புதிதாக அமைக்கப்பட உள்ள சந்தையில் 100 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 325 சங்க உறுப்பினர்களை நம்பி 5 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அதிக அளவில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில், நகராட்சி சுகாதாரத்துறையினர், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக கடை ஒதுக்கீடு செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.

    அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக நேற்று திறக்கப்படுவதாக இருந்த காய்கறி சந்தை திறக்கப்படவில்லை.



    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,937 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,31,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,144-ஆக அதிகரித்துள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு  அடைந்தோர் எண்ணிக்கை 89,561 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,697 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,937 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 3,051 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். 
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 296 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,658 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,26,670 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,626-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,362 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,658 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,934 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர். 
    தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மனின் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்துள்ள நிலையில், மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
    நிலத்தகராறு மோதலில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    நேற்று இதயவர்மனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    உடனடியாக அவரை காவலில் எடுத்து போலீசார் விசாணை நடத்தினர். விசாரணை முடிந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மீண்டும் இதயவர்மனை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து எம்எல்ஏ இதயவர்மன் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை ஒருநாள் காவிலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு செங்கல்பட்டு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
    நிலத்தகராறு மோதலில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    இந்நிலையில் இதயவர்மனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    காஞ்சீபுரத்தில் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் அதிர்ச்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரம் அமுதுபடி பின்தெருவை சேர்ந்தவர் ராமு யாதவ் (வயது 79). கடலூர் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ராஜேஸ்வரி (67). இவர்களுக்கு வேலு, வரதராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் வரதராஜன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், ராமு யாதவ் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சியடைந்த ராமு யாதவ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் அமர்ந்தபடியே எந்தவித அசைவுமின்றி காணப்பட்டார். இதை அறிந்த அருகாமையில் வசித்து வந்த அவரது மகன் உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு ராமு யாதவ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,356 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,21,776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,095 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,356 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,839 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,054 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,17,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,481-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 4,739 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 315 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,054 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,543 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர். 
    கொரோனா தொற்று நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகே நேற்று காகங்கள் வானில் பறந்து வந்தன. திடீரென ஒன்றன்பின் ஒன்றாக 15 காகங்கள் மயங்கி கீழே விழுந்தன. அங்கு இருந்தவர்கள் அந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் 15 காகங்களும் பரிதாபமாக செத்தன.

    இது குறித்து அங்கு இருந்தவர்கள் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த காகங்களை சுற்றி பிற காகங்கள் வட்டமிட்டு கத்திக்கொண்டே இருந்தன. கொரோனா தொற்று நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,714 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 84,598 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 4,519 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,714 ஆக உயர்ந்துள்ளது.


    காஞ்சிபுரத்தில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2196 பேர் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் வாகனம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வருகிற 26-ந் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் வாகனம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நகராட்சி சுகாதார குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,512 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,60,907 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,10,807 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,315-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 4,422 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,512 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,348 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் உயிரிழந்துள்ளனர். 
    ×