என் மலர்
செய்திகள்

திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன்
துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்
துப்பாக்கிச்சூடு வழக்கில் திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை ஒருநாள் காவிலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு செங்கல்பட்டு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
நிலத்தகராறு மோதலில் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் இதயவர்மனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story






