என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காஞ்சிபுரத்தில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,356 ஆக உள்ளது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,21,776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 5,095 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,356 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,839 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×