என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பிள்ளையார்பாளையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைசப்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் வாகனம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வருகிற 26-ந் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் வாகனம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் நகராட்சி ஆணையர் ஆர்.மகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நகராட்சி சுகாதார குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×