search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்
    X

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை - ஜெயக்குமார் திட்டவட்டம்

    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பா.ஜனதாவுடன் கூட் டணி இல்லை என்று கடந்த 18-ம் தேதி முடிவெடுத்து அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நிலையே தொடருகிறது.

    நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி கூட்டம் முடிந்ததும் அறிவிப்போம்.

    1972-ம் ஆண்டு முதல் பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம்தான் அ.தி.மு.க. பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அ.தி.மு.க.வை ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காகவே மத்திய மந்திரியை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். மத்திய மந்திரியிடம் கட்சி சார்ந்த விஷயங்கள் பற்றி பேசவில்லை என்றார்.

    அதை தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடக்கும் என்று உங்களுக்கு மிரட்டல் வந்ததாக தகவல் பரவி உள்ளதே என்று கேட்டதற்கு, "இதுபோன்ற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை. சோதனைகளை கண்டு அஞ்சும் கூட்டம் நாங்கள் அல்ல" என்றார்.

    அந்த பூச்சாண்டி பா.ஜனதாவா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் மற்ற விஷயங்கள் நாளை கூறுகிறேன் என்றார்.

    அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் மீண்டும் கூட்டணி தொடர்பாக கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×