search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், ஜாக்டோ ஜியோ மாநாடு
    X

    திருவாரூரில், ஜாக்டோ ஜியோ மாநாடு நடந்தது.

    திருவாரூரில், ஜாக்டோ ஜியோ மாநாடு

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • வருகிற 5-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரதம்.

    திருவாரூர்:

    ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் கலந்து கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பழைய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு புதிய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் நியமன முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    அகவிலைப்படி மத்திய அரசு வழங்கிய அதே தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.

    இவை அனைத்தும் தமிழக பட்ஜெட்டில் தமிழக முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற மார்ச் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×