என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதலமடைந்த சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
உடுமலையில் சிதலமடைந்த சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
- தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
- நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.
உடுமலை:
உடுமலை நகரப் பகுதியில் உள்ள ரோடுகளில் மழை நீர் தேக்கம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பெரும்பாலான ரோடுகள் குண்டும் குழிமாக மாறி காணப்படுகின்றன.பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் ரோடு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்புஅடைந்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் நீர் தேங்கியிருப்பது தெரியாமல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. அதே போல் நகர எல்லை வரை பழனி ரோடு மற்றும் கொழுமம் ரோட்டில் பல இடங்களில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன.பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் ஒரு சில பகுதிகளில் உடைந்து தாழ்வாகவும் பெரும்பாலான இடங்களில் உயரமாகும் உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தாராபுரம் ரோட்டில் சிவசக்தி காலணி வரை பல இடங்களில் பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டுள்ளன.
திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு , தளிரோடு என நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோடுகள் மட்டுமின்றி நகராட்சி ரோடுகளும் பரிதாப நிலைக்கு மாறி உள்ளன.நகராட்சிக்குட்பட்ட ராமசாமி நகர் ரோடு, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு ,வெங்கடகிருஷ்ணா ரோடு, அனுஷம் நகர் ரோடு என நகராட்சி பராமரிப்பில் உள்ள பெரும்பாலான ரோடுகளும் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் பராமரிக்கவும் இல்லாமல் சேதமடைந்துள்ளன.இந்த ரோடுகளால் போக்குவரத்து நெரிசல் விபத்துக்கள் ஏற்படும் நிலையில் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை உடுமலை, மடத்துக்குளம், புதுக்கோட்டை மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குண்டும் குழியுமாக மாறி உள்ள ரோடுகளை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






