search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது எப்படி? கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
    X

    டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவது எப்படி? கோவை சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்

    • மாநகராட்சி பகுதிகளில் 25 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக அறியப்பட்டுள்ளது.
    • வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் வடியும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 60 இடங்கள், மாநகராட்சி பகுதிகளில் 25 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக அறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் டெங்கு காய்ச்சல் காரணமாக 56 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 நாளில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் உள்நோயாளிகளாக தினமும் 5 பேர் வரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் மொத்தம் 85 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது.

    அந்த பகுதிகளில் கொசு புழு ஒழிப்பு, கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், மாஸ் கிளினீங், சிறப்பு காய்ச்சல் முகாம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தவிர பொதுமக்களுக்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த, கொசு ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    எனவே வீடுகளில் குடங்கள், டிரம் போன்றவை யில் சேகரிக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். குடம், டிரம் போன்றவற்றை நார் வைத்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். கை வைத்து தேய்த்தால் கொசு முட்டை அழியாது. தண்ணீரை காற்று நுழையாத வகையில் நன்றாக மூடி வைக்க வேண்டும். வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    பயன்படுத்தாமல் உள்ள அறைகள், மொட்டை மாடி போன்ற இடங்களில் கொசு புழுஉற்பத்தியை தடுக்கும் வகையில் தூய்மையாக வைத்து கொள்ள வேண் டும். வீடுகளில் வளர்க்கும் மணி பிளான்ட் போன்றவை களில் வைக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் வடியும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

    கட்டுமானம் நடக்கும் பகுதிகளில் தங்கியுள்ள வெளியூர் தொழிலாளர்கள், ஊருக்கு செல்லும் போது அங்குள்ள பாத்திரங்கள், பொருட்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தம் செய்து விட்டு தலைகீழாக வைத்து விட்டு செல்ல வேண்டும். இதனை கட்டு மான உரிமையா ளர்கள் உறுதி செய்ய வேண்டும். வீட்டின் கட்டுமானத்தின் போது கான்கிரீட் தளம் அமைக்கும் போது நீண்ட நாட்கள் தண்ணீரை தேங்க விடக்கூடாது. அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். அல்லது தண்ணீரின் மீது ஆயில் ஸ்பிரே செய்து விட வேண்டும்.

    இதுபோன்ற நடவடிக்கையால் கொசு உற்பத்தியை தடுக்க முடியும். வீட்டை சுற்றியுள்ள பழைய டயர், உடைந்த பானை போன்ற மழைநீர் தேங்க கூடிய அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×