என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
    X

    ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

    • சீனாவில் இருந்து பெயிண்ட் ரோலர் மற்றும் வால்வு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
    • 11-ந் தேதி அந்த உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    கோவை,

    கோவை மதுக்கரை வி.எஸ்.என். கார்டனை சேர்ந்தவர் அருண்பாபு (39). இவர் சிட்கோ ெரயில்வே கேட் அருகே ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு எந்திரங்களுக்கு வால்வு தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், 8-ந் தேதி சீனாவில் இருந்து பெயிண்ட் ரோலர் மற்றும் வால்வு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

    இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும். இந்த உபகரணங்கள் நிறுவனத்தின் அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 11-ந் தேதி அந்த உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருண்பாபு இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×