என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.
- கிராமங்களில் இருந்து 1500 ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
அன்னூர்,
பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. அன்னூர் ஆட்டு சந்தையில், நேற்று ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
கோவை மாவட்டம், அன்னூரில் ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை யன்று ஆட்டுச் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் சத்தி, புளியம்பட்டி, அவிநாசி, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து, 1500 ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு, செம்மறி கிடாய் ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானது. குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.
கால்நடை வளர்ப்போர் கூறுகையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம், ஒரு ஆட்டுக்கு 3 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது.
ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளன என்றார்.
கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.






