என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் போலி ஆவணங்களை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து ரூ.40 லட்சம் மோசடி
- பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் லோன் முடிந்ததாக நிறுவனத்தின் பெயரில் போலியான ஆவணத்தை கொடுத்துள்ளார்.
- புகாரின் பேரில் போலீசார் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இடையர்பாளைத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 39). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தலைமை கலெக்ஷன் மேலாளராக உள்ளார். ரமேஷ்குமார் மேட்டுப்பாளையம் போலீசில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்ப தாவது:-
எங்களது நிறுவனத்தில் மேட்டுப்பாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த அபிஷேக் (26) என்பவர் கலெக்ஷன் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக எனக்கு இவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அவரை பற்றி நிறுவனத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளரிடம் விசாரணை நடத்தினேன். அப்போது அபிஷேக் வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி இ.எம்.ஐ. மற்றும் செட்டி ல்மெண்ட் தொகையை பெற்றுக்கொண்டு அதில் தள்ளுபடி தருவதாக கூறி உள்ளார்.
மேலும் பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் லோன் முடிந்ததாக நிறுவனத்தின் பெயரில் போலியான தடையில்லா சான்று ஆவணத்தை தயார் செய்து கொடுத்து நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார்.
அபிஷேக் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அம்பிகா, நடராஜ், சாயிதா, ராஜேஸ்வரி, சுதாகர், விஜயா உள்பட 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






