என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உள்பட 4 பேர் கைது
- சுரேஷிடம் இருந்து ரூ. 850 பணத்தை பறித்து தப்பி சென்றனர்.
- சுரேஷ் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). மெக்கானிக். சம்பவத்தன்று இரவு தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேசை மிரட்டி பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்து ரூ. 850 பணத்தை பறித்து தப்பி சென்றனர்.
இது குறித்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்தி முனையில் பணம் பறித்தது சின்னியம்பாளையத்தை சேர்ந்த ஜெகத் ஹரி (20), விஷாகன்(22), பிரதீப் (26) மற்றும் ஆர்.ஜி.புதூரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






