என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய தந்தை மகன் கைது
- கடந்த சில மாதமாக மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருடு போனவண்ணம் உள்ளது
- அவர்கள் 4 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக் கொண்டார்
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்க ளில், கடந்த சில மாதமாக மோட்டார் சைக்கிள் அடிக்கடி திருடு போனவண்ணம் உள்ளது இது குறித்த புகார்கள் அதிகரித்ததை அடுத்து, காரைக்கால் நகர போலீசார், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, பிரவீன் குமார் தலைமையில், வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காரைக்கால் நகர எல்லைக்குள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஒருவரை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், முன்னுக்கு பின் முறனாக பதில் கூறியதால், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 23) என்பதும், அண்மையில் காரைக்கால் நகர் பகுதி யில், 4 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக் கொண்டார். மேலும், இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை குருமூர்த்தி (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






