என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.34 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.34 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1700 வரை பதிவானது.
இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது.
2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். தற்போது மீண்டும் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
எனினும் மாவட்டத்தில் தற்போது வரை தினமும் 4 ஆயிரம் முதல் 4,500 வரை மட்டுமே தினசரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 25 லட்சத்து 34 ஆயிரத்து 263 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7&ந் தேதி முதல் தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 919 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 13 கூடுதலாகும்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 406 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர், 43 வயது ஆண் மற்றும் 57 வயது பெண் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்து உள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் 4,465 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாநகர பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநகர் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது.
ஈரோடு:
வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது.
ஈரோடு வ. உ. சி. பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தினமும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, தர்மபுரி, கர்நாடக மாநிலம் கோலார் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிகளவில் வரத்தாகி வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தக்காளி வரத்து திடீரென குறைந்தது. தினமும் 5 ஆயிரம் பெட்டிகள் வரவேண்டிய இடத்தில் வெறும் 1,500 பெட்டிகள் மட்டுமே வந்தன.
இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை எளிய பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
பின்னர் படிப்படியாக நிலைமை சீராகி தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.40 வரை விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் வ.உ.சி நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து 4 ஆயிரம் பெட்டிகள் தக்காளி விற்பனைக்கு வந்து உள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ. 15 வரை விற்பனையானது. 13 கிலோ கொண்ட சின்ன பெட்டி ரூ.150 வரை விற்பனையானது. 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.350 வரை விற்பனையானது.
ஈரோட்டில் வாகன சோதனையில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோட்டில் வாகன சோதனையில் பிரபல கொள்ளையர்கள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம், தாசன்காட்டுபுதூரை சேர்ந்தவர் அருள் நாகலிங்கம் (வயது 40). சித்த மருத்துவர். இவரது வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி மர்மநபர்கள் புகுந்து 20 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கபணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி.ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று மொடக்குறிச்சி போலீசார் கேட்புதூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தினர். காரில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விசாரணைக்காக மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், பிரகாஷ்நகரை சேர்ந்த ராஜ்கமல் (31) என்பதும், மற்றொருவர் திருச்சி மாவட்டம் துவாக்குடி, வசந்தம் நகரைச் சேர்ந்த டேவிட் (29) என்பதும் தெரியவந்தது. இருவரும் நண்பர்கள்.
இருவரும் சேர்ந்து சித்தமருத்துவர் வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.
இதுதவிர மொடக்குறிச்சி கேட்புதூரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள், சின்னியம்பாளையத்தில் ஒரு பவுன் நகை, ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் ஒரு கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை அடித்ததையும் ஒப்பு கொண்டனர்.
மேலும் இவர்கள் திருவண்ணாமலை, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மொடக் குறிச்சி போலீசார் இருவ ரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 24 பவுன் நகைகள், ரூ .6 லட்சம் ரொக்கப்பணம், ஒரு கிலோ வெள்ளி மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளைச்சிறையில் அடைக்கப் பட்டனர்.
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மல்லிகை, முல்லைப்பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மல்லிகை, முல்லைப்பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப்பூ சாகுபடி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
பவானிசாகர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், செண்பகப்புதூர், நெகமம், புது வடவள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்தது. பூ மார்க்கெட்டுக்கு தினமும் 2 டன் பூக்களை விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
ஆனால் பனி பொழிவு காரணமாக வெறும் 500 டன் பூக்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டது.
வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
இதனால் ரூ.1,802-க்கு ஏலம் போன மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்து 345 வரை ஏலம் போனது. இதே போல் முல்லைப்பூ உள்பட மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
இங்கு ஏலம் எடுக்கப்பட்ட பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை போன்ற வெளிமாநிலங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைத்தனர்.
விலை உயர்வு காரணமாக சில்லரை வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய முடியாமல் சிரமம் அடைந்தனர்.
பூக்களின் விலை நிலவரம் வருமாறு:-
மல்லிகைப்பூ ரூ.2,345, முல்லை ரூ.1,440, செண்டு மல்லி ரூ.35, கனகாம்பரம் ரூ.500, சம்பங்கி ரூ.30-க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே கல்லூரி பேராசிரியரின் மனைவியை குத்திக்கொன்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் கே.கே.நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் கணேசன். ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி வளர்மதி (55). இவர்களுக்கு சிவரஞ்சனி, சிவசங்கரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றனர்.
ஓய்வுபெற்ற பேராசிரியர் கணேசன் நேற்று பென்சன் தொடர்பாக பவானிக்கு சென்று விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அப்போது வீட்டில் அவரது மனைவி வளர்மதி மட்டும் தனியாக இருந்தார்.
கணேசன் செல்போன் மூலம் தனது மனைவியை தொடர்பு கொண்டார். நீண்ட நேரம் மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. செல்போனை அவர் எடுக்கவில்லை.
இதையடுத்து சந்தேகம் அடைந்த கணேசன் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து இருந்தது. மேலும் டி.வி. ரிமோட் மற்றும் அவரது மனைவி வளர்மதியின் செல்போன் ஆகியவை உடைந்து காணப்பட்டது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது ஒரு அறையில் வளர்மதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் அலறி சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் இந்த கொலை குறித்து சித்தோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கனகேஸ்வரி, பாலாஜி, பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகய்யா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை நடந்த வீட்டிற்கு துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் கொலை நடந்த வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரம் மெயின் ரோடு வரை ஓடி நின்றது.
இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட வளர்மதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த கொலை சம்பவம் குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டின் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு மர்மநபர் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நபர் பவானி லட்சுமி நகரை சேர்ந்த தன்ராஜ் என்பவரது மகன் ராஜா என்கிற நிக்கோலஸ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.
அப்போது நிக்கோலஸ் பவானி காலிங்கராயன் பாளையம் பஸ் நிறுத்தத்தில் நிற்பது தெரிய வந்தது. இதையடுத்து சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகைய்யா விரைந்து சென்று நிக்கோலசை பிடித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் வளர்மதியை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகையுடன் தப்பி செல்ல திட்டமிட்டதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் நிக்கோலசை கைது செய்தனர். பின்னர் நிக்கோலஸ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கொலை செய்யப்பட்ட வளர்மதி வீட்டின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நான் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி பேராசிரியர் கணேசனிடம் படித்தவர். மேலும் எனது மாமா எட்வின் சுந்தரம் என்பவரும் பேராசிரியர் கணேசனும் நண்பர்கள்.
இதனால் நான் பேராசிரியர் கணேசன் மற்றும் அவர் குடும்பத்தினருடன் சகஜமாக பழகி வந்தேன். எனக்கு அவசரமாக ரூ.3 ஆயிரம் தேவைப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் 2 மணி அளவில் கணேசன் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவரது மனைவி வளர்மதி மட்டும் தனியாக இருந்தார்.
அவரிடம் நான் அவசர தேவையாக ரூ.3 ஆயிரம் தேவைப்படுகிறது. கடனாக கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு வளர்மதி தன்னிடம் பணம் இல்லை என்று மறுத்தார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டேன். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நான் இவ்வளவு வசதியாக இருந்து கொண்டும் ரூ3 ஆயிரம் கடனாக தரமாட்டியா என்று கோபம் அடைந்தேன். அப்போது அவரது வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து ஆத்திரத்தில் வளர்மதியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார்.
இதையடுத்து அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிகொடி மற்றும் மற்றொரு செயின் ஆகியவற்றை திருடிக் கொண்டு வெளியேறினேன். திருடிய நகைகளை எங்கேயாவது விற்றுவிட்டு மும்பைக்கு தப்பி செல்ல திட்டமிட்டேன். அப்போது காலிங்கராயன் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டு இருந்த போது போலீசார் பிடித்து விட்டனர்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டில் ரூ.150 கோடி ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மஞ்சள்-, ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்திய அளவில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. குறிப்பாக இங்கு நடைபெறும் தினசரி மற்றும் வாரச்சந்தைகள் தென்னிந்திய அளவில் மிக புகழ்பெற்றவை.
இங்கு குறைவான விலையில் இருந்து அதிக விலை வரை அனைத்து ஜவுளி ரகங்களும் கிடைப் பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளி பொருட்களை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் கொரோனோ பரவல் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமலப்படுத்தி உள்ளது.இதன் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தைகளில் பொங்கல் விற்பனையானது பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள கனி மார்க்கெட்,சென்ட்ரல் தியேட்டர் மார்கெட் ,அசோகபுரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கால் ஜவுளி சந்தைகளில் நடைபெறும் ஓட்டுமொத்த ஜவுளி வியாபாரம் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இதனால் கோடிக்கணக்கான மதிப்பில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
இரவு நேர ஊரடங்கால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொங்கல் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஜவுளி வர்த்தகம் ஸ்தம்பித்து போகும் அளவுக்கு உள்ளது.
ஒரு புறம் நூல் விலை ஏற்றம் மற்றொரு புரம் இரவு நேர ஊரடங்கு என வெளிமாநில வியாபாரிகள் வரத்து குறைந்து உள்ளது. பொங்கலுக்கு தயார் செய்யப்பட்ட ஆடைகள் அனைத்தும் தேக்கம் அடைந்து உள்ளது.
ரூ. 150 கோடிக்கு மேல் ஜவுளிகள் தேக்கம் அடைந்து உள்ளதால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளோம். இரவு நேர ஊரடங்கு காரணமாக மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என்பதால் எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இந்தியாமுழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் கடந்த 10--ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் ஊசி செலுத்தி உள்ள நிலையில், சிறப்பு முகாம்கள் நடத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று மாநிலம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.
இந்த சிறப்பு முகாமில் 5,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
ஈரோடுமாவட்டத்தில் உள்ள கால்வாய்களின் ஆயக்கட்டுப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைப் பருவத்தை நெருங்கியுள்ளன. மாவட்டத்தில் ஆங்காங்கே அறுவடைப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அறுவடை செய்யும் நெல்லினை கொள்முதல் செய்ய நேரடிநெல் கொள்முதல் மையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தொடங்கப்படவுள்ளன.
தற்பொழுது ஈரோடு வட்டாரம் வைராபாளையத்திலும், பெருந்துறை வட்டாரத்தில் பெத்தாம்பாளையத்திலும் ஏற்கனவே கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை வட்டாரம் பூதப்பாடி, பவானி வட்டாரம் மைலம்பாடி, கோபி வட்டாரம் நாதிபாளையம், கொடுமுடி வட்டாரம் கொடுமுடிஆகிய இடங்களில் இன்று முதல் நெல் கொள்முதல் மையங்கள் செயல்படவுள்ளன.
விவசாயிகள் இந்த மையங்களை பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இதற்கு ஏதுவாக விவசாயிகள் ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.
ஏதேனும் ஒருகணிணி மூலமாகவோ அல்லது பொது இ சேவைமையங்கள் மூலமாக http://tncsc-edpc.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் சுயவிபரம், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலத்தின் விபரம், பரப்பளவு, எதிர்பார்க்கும் மகசூல், கொள்முதல் மையத்திற்கு நெல்லினைக் கொண்டுவரும் உத்தேச தேதி ஆகிய விபரங்களைபதிவு செய்ய வேண்டும்.
மேலும் நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் சான்று ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் பதிவு உறுதி செய்யப்பட்ட விபரம், நெல் கொள்முதல் மையத்தின் பெயர் நாள் ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.
விவசாயிகள் அந்த மையங்களுக்கு சென்று நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இவ்வசதியினைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி பதவிகள் யார் யாருக்கு என்று இடஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
ஈரோடு:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி பதவிகள் யார் யாருக்கு என்று இடஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இதில் புஞ்சைபுளியம்பட்டி தலைவர் பதவி பொது (எஸ்.சி), சத்தியமங்கலம் பெண்கள் (பொது), கோபி, பவானி நகராட்சிகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் ஒவ்வொரு நகராட்சியிலும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டு பெண்கள், 2-வது வார்டு பொது, 3-வது வார்டு பொது, 4-வது வார்டு பொது, 5-வது வார்டு பொது, 6-வது வார்டு பெண்கள், 7-வது வார்டு பெண்கள், 8-வது வார்டு பெண்கள், 9-வது வார்டு பெண்கள், 10-வது வார்டு பொது, 11-வது வார்டு பொது, 12-வது வார்டு பெண்கள், 13-வது வார்டு பெண்கள், 14-வது வார்டு பொது, 15-வது வார்டு பெண்கள், 16-வது வார்டு பெண்கள், 17-வது வார்டு பொது (எஸ்..சி), 18-வது வார்டு பொது, 19-வது வார்டு பெண்கள், 20-வது வார்டு பெண்கள், 21-வது வார்டு பெண்கள், 22-வது வார்டு பொது, 23-வது வார்டு பொது, 24-வது வார்டு பெண்கள், 25-வது வார்டு பெண்கள் (எஸ்.சி), 26-வது வார்டு பொது, 27-வது வார்டு பொது.
புஞ்சைபு-ளியம்பட்டி நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டு பொது, 2-வது வார்டு பெண்கள், 3-வது வார்டு பெண்கள் (எஸ்.சி), 4-வது வார்டு பெண்கள், 5-வது வார்டு பொது, 6-வது வார்டு பெண்கள், 7-வது வார்டு பெண்கள், 8-வது வார்டு பொது, 9-வது வார்டு பொது, 10-வது வார்டு பொது, 11-வது வார்டு பொது, 12-வது வார்டு பொது (எஸ்.சி), 13-வது வார்டு பெண்கள் (எஸ்.சி), 14-வது வார்டு பெண்கள், 15-வது வார்டு பொது, 16-வது வார்டு பொது, 17-வது வார்டு பொது (எஸ்.சி), 18-வது வார்டு பொது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் 26-வது வார்டு எஸ்.சி. பொதுப்பிரிவினருக்கும், 4,30-வது வார்டுகள் பெண்கள் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,3,6,7,12,13,17,18,20,21,23,28, 29 ஆகிய 13 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவினருக்கும், 1,5,8,9,10,11,14, 15,16,19,22,24,25,27 ஆகிய 14 வார்டுகள் ஆண்கள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் மொத்தம் 44 ஆயிரத்து 300 வாக்காளர்கள் உள்ளனர்.
பவானி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகள் பெண்களுக்கும், 13 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பவானி நகராட்சி பகுதியில் மொத்தம் 30 ஆயிரத்து 282 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 36 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.
ஈரோடு:
கொரோனாகட்டுப்பாடுகள் காரணமாக கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கமாகும். இந்த மாட்டுச் சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ,கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.
இதுபோல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த மூன்று வாரமாக மாட்டுச் சந்தைகளில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. குறிப்பாக கேரளாவில் இருந்து மாட்டுச்சந்தைக்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக வியாபாரிகள் வர தயங்குகின்றனர்.
இதனால் கடந்த சில வாரமாக கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வியாபாரம் மந்த நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் இன்று கூடிய மாட்டுச்சந்தையில் 250 பசு மாடுகள், 175 எருமை மாடுகள், 75 கன்றுகள் என மொத்தம் 500 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இன்று கூடிய மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை.
உள்ளூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஒரு சில வியாபாரிகள் வந்தனர். இன்று விற்பனை மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது . கடந்த 7--ந் தேதி தினசரி பாதிப்பு 100- ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 129 கூடுதலாகும்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 317 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 518ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் 83 வயது முதியவர் மற்றும் 73 வயது முதியவர் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த 2 முதியவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 3,955 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மாலைக்குள் 4 ஆயிரத்தை கடந்து விடும்.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநகர் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் கொரோனா பாதிப்புடன் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.