என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சத்தியமங்கலத்தில் மல்லிகை, முல்லைப்பூ விலை கிடுகிடு உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மல்லிகை, முல்லைப்பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
  சத்தியமங்கலம்:

  சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மல்லிகை, முல்லைப்பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

  சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகைப்பூ சாகுபடி முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

  பவானிசாகர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், செண்பகப்புதூர்,  நெகமம், புது வடவள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

  இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்யும் பணியில்  ஈடுபட்டு வருகிறார்கள்.

  இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூக்களை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள்.

  இந்தநிலையில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது. 

  மேலும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சத்தியமங்கலம் பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்தது. பூ மார்க்கெட்டுக்கு தினமும் 2 டன் பூக்களை விவசாயிகள் கொண்டு வருவார்கள். 

  ஆனால் பனி பொழிவு காரணமாக வெறும் 500 டன் பூக்கள் மட்டுமே கொண்டு வரப்பட்டது. 

  வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் பூக்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். 

  இதனால் ரூ.1,802-க்கு ஏலம் போன மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்து 345 வரை ஏலம் போனது. இதே போல் முல்லைப்பூ உள்பட மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

  இங்கு ஏலம் எடுக்கப்பட்ட பூக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை போன்ற வெளிமாநிலங்களுக்கும் வியாபாரிகள் அனுப்பி வைத்தனர்.

  விலை உயர்வு காரணமாக சில்லரை வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய முடியாமல் சிரமம் அடைந்தனர்.

  பூக்களின் விலை நிலவரம் வருமாறு:-

  மல்லிகைப்பூ ரூ.2,345, முல்லை ரூ.1,440, செண்டு மல்லி ரூ.35, கனகாம்பரம் ரூ.500, சம்பங்கி ரூ.30-க்கு விற்பனையானது.
  Next Story
  ×