என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  ஈரோட்டில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
  ஈரோடு:

  ஈரோட்டில் ஒரே நாளில் 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.

   ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7&ந் தேதி முதல் தினசரி பாதிப்பு  ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

  இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 919 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 13 கூடுதலாகும்.

  இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. 

  நேற்று ஒரேநாளில் 406 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது.

  இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர்,  43 வயது ஆண் மற்றும் 57 வயது பெண் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்து உள்ளது.

  தற்போது மாவட்டம் முழுவதும் 4,465 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  மாநகர பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநகர் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
  Next Story
  ×