என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்த 18 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்த 18 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு மதிப்பெண் அவசியம். அதன் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.
இந்த நிலையில் மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களும் சேர வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு அவர்களுக்கு என்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டன. இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவ&மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டனர். 4 மாணவிகள் பல் மருத்துவ மனையில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.
இதில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அரசு பள்ளியில் படித்த ராஜசேகர் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
இதேப்போல் கள்ளிப்பட்டி அரசு பள்ளியில் படித்த மோகனந்தசாமி என்ற மாணவருக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியும், சென்னபுரம் அரசு பள்ளியில் படித்த தமிழரசு என்ற மாணவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியும், கவுந்தப்பாடி அரசு பள்ளியில் படித்த மாரியப்பன் என்ற மாணவருக்கு தூத்துக்குடி மருத்துவ கல்லூரியிலும்,
கவுந்தபாடி அரசு பள்ளியில் படித்த சுருதவியா என்ற மாண விக்கு தூத்துக் குடி அரசு மருத் துவக் கல்லூ ரிலும், பி.மேட் ப் பாளையம் அரசு பள்ளியில் படித்த மாணவி கவிபிரியாவுக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியிலும், தாஸ்யப்ப கவுண்டன்புதூர் அரசு பள்ளியில் படித்த ஹேமவர்ஷினி என்ற மாணவிக்கு கூடலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும்,
பெருந்துறை அரசு பள்ளியில் படித்த மாணவி தாரணாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியிலும், குமலன்குட்டை அரசு பள்ளியில் படித்த மாணவர் பரத்குமாருக்கு வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும், அந்தியூர் அரசு பள்ளியில் படித்த மாணவி மதுமதிக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும்,
அரசு பள்ளியில் படித்த மாணவர் குழு பிரசாந்துக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியிலும், பெருந்துறை அரசு பள்ளியில் படித்த மாணவர் அஜித்துக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரியிலும், வீரப்பன்சத்திரம் அரசு பள்ளியில் படித்த மாணவி ஆனந்திக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியிலும், ஈரோடு ரெயில்வே காலனி அரசு பள்ளியில் படித்த மாணவர் தீக்ஷித்துக்கு கரூர் மருத்துவ கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிப்ப தற்கான இடம் கிடைத்தது.
இதேபோல் அந்தியூர் அரசு பள்ளியில் படித்த மாணவி மோனிகாவுக்கு சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியிலும், துடுப்பதி அரசு பள்ளியில் படித்த மாணவி சுலேதாபேபிக்கு சேலம் பல் மருத்துவக்கல்லூரியிலும், மயிலம்பாடி அரசு பள்ளியில் படித்த மாணவி சீலாவுக்கு கூடலூர் பல் மருத்துவக்கல்லூரியிலும், கவுந்தப்பாடி அரசு பள்ளியில் படித்த மாணவி மஞ்சுவுக்கு கோவை ராம கிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்து உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 497 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று 497 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் என்ற பெயரில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இந்நிலையில் இன்று 20&வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 497 மையங்களில் காலை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.
1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1988 பணியாளர்கள், 66 வாகனங்கள் பயன் படுத்தப்பட்டு வருகிறது.
இதேப்போல் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இதேபோல 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இன்று முகாம்களில் போடப்பட்டு வருகிறது. இது போல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் இன்றைய முகாமில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
முதலில் மாநகர பகுதியில் வேகமாக பரவிய கொரோனா தற்போது கிராமப்புற பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இதேபோல் முன் களப்பணி யாளர்களான போலீசார் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர், தலைமை காவலர்கள், போலீசார் என தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 164 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் வெளியே நின்று மனு கொடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் புறகாவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் போலீசாருக்கு தொற்று பரவி வருவதால் மற்ற போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறையினர் நேற்று வெளியிட்ட பட்டியல் படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 1,261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 937 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் மற்றும் 74 வயது முதியவர் என இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 8,450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு அருகே கொத்து புரோட்டோ இல்லை என கூறிய மெஸ் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (46). இவர் அதே பகுதியில் கடந்த 8 வருடமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சம்பவத்தன்று இரவு 10.50 மணியளவில், சங்கு நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிக், ரசூல் ஆகிய 2 பேரும் சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது 2 பேரும் சாப்பிட கொத்து புரோட்டா கேட்டுள்ளனர். அதற்கு கடையில் பணியாற்றும் பணியாளர் கடையை மூடும் நேரம் வந்துவிட்டதால் கொத்து புரோட்டா இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிக் மற்றும் ரசூல் நாங்கள் யார் என்று தெரியுமா என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிக், தான் போலீஸ்காரரின் தம்பி என கூறி அவரது அண்ணன், ஆயுதப்படைக்காவலரான உமர்பாரூக் (24) என்பவருக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தனது நண்பரான இரட்டைபாளி வலசு பகுதியைச் சேர்ந்த, கார் பெயிண்டரான கார்த்தி (26) என்பவருடன் வந்த உமர்பாரூக் ஓட்டல் உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அப்போது உமர்பாரூக் அங்கிருந்த சேரை எடுத்து ஓட்டல் உரிமையாளர் ஈஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுதப்படை போலீஸ்காரர் உமர்பாரூக், அவரது தம்பி ஆசிக், நண்பர் ரசூல் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களது நண்பர்களில் ஒருவரான கார்த்தி தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரைத்தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆயுதப்படை போலீஸ்காரர் உமர்பாரூக் கைது செய்யப்பட்ட தகவல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஒரு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஒரு யானை மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பவானிசாகர் வனசரகர் சிவகுமார் மற்றும் வன ஊழியர்கள் தெங்கு மரஹடா, பெஜலட்டி, மாயாறு என வனப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்போது பவானிசாகர் அருகே உள்ள காராச்சி கோரை வனப்பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது. அந்த யானையை ஆய்வு செய்தனர். இதில் அது பெண் யானை என தெரிய வந்தது. மேலும் அந்த யானை வாயில் ரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த யானை கீழே விழுந்து இறந்ததா? அல்லது எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி யூனியன் அலுவலக பணியாளர்கள்-கவுன்சிலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது.
கொடுமுடி:
கொடுமுடி யூனியன் அலுவலக பணியாளர்கள்-கவுன்சிலர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க முடிவு செய்யப்பட்டது.
கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 24-ந் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளரை தாக்க முயன்றதாகவும், அலுவலக பணியாளர்களை பணி செய்ய இடையூறு செய்வதாகவும் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய குழு 1-வது வார்டு உறுப்பினர் டி.பழனிசாமி, 2-வது வார்டு உறுப்பினர் எம்.ஏ.பழனிசாமி, 4-வது வார்டு உறுப்பினர் பரமசிவம் மற்றும் 5-வது வார்டு உறுப்பினர் சி.வளர்மதியின் கணவர் சின்னுசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் அனைவரும் கையெழு த்திட்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி 24-ந் தேதி முதல் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதேபோல் கவுன்சிலர்கள் தரப்பிலும் மேலாளர், மற்றும் பணியாளர்கள் மீது கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை கொடுமுடி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் கொடுமுடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஈரோடு மாவட்ட துணை கண்காணிப்பாளர் கவுதம் கோயல் நேரடியாக வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதன் தொடர்ச்சியாக இரவு சுமார் 10 மணியளவில் எதிர் தரப்பை சேர்ந்த 1,2, 4, வார்டு கவுன்சிலர்கள், 5 வது வார்டு கவுன்சிலர் சி.வளர்மதியின் கணவர் சின்னுசாமி ஆகியோரை வரவழைத்து கொடுமுடி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்ட அரங்கில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தை நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் உதவியாளர் ஜெகதீசன், மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் அலுவலக பணியாளர்களும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களும் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது, கவுன்சிலர்கள் தங்கள் சந்தேகங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிடுவது எனவும் 2 தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் பிரச்னைக்கு முடிவு ஏற்பட்டது.
வார இறுதி நாட்களில் வழிபட தடை நீக்கப்பட்டாதல் கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு:
வார இறுதி நாட்களில் வழிபட தடை நீக்கப்பட்டாதல் கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி கரித்து வந்ததால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை களில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து வருகிறது. இதே போல் வழிபாட்டு தலங்களுக்கு இறுதி நாட்களில் செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது.
வழக்கம் போல் அனைத்து நாட் களிலும் பக்தர்கள் வழிகாட்டு வழிமுறைகளை கடை பிடித்து கோவில்களுக்கு செல்லலாம் என அரசு அறிவித்து உள்ளது.
இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பண்ணாரியம்மனை வழி பட்டனர்.
சத்தியமங்கலம், மற்றும் சுற்று வட்டார பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இன்று காலை அதிகளவில் வந்தி ருந்தினர். அவர்கள் கைகளை கழுவிய பிறகே சமூக இடைவெளியுடன் அனு மதிக்கப்பட்டனர்.
இதே போல் கோபி கொண்டத்து காளியம்மன், சாரதா மாரியம்மன், பச்ச மலை, பவளமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், குருநாத சாமி, கவுந்தப்பாடி மாரியம்மன் கோவில் பெருந்துறை ஈஸ்வரன் கோவில், சென்னிமலை முருகன், மொடக்குறிச்சி கரியகாளியம்மன், எழுமாத்தூர் கொங்காளியம்மன் கோவில், திண்டல் வேலாயுத சாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இன்று காலை முதல் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு இன்று பக் தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொதுமக்கள் பலர் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கொடுமுடி காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராடி மகு டேஸ்வரரை வழிபட்டு சென் றனர்.
ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று காலை ஏராளமான பக்தர்கள் வந்து வழி பட்டனர்.
தொடர் மழையால் திம்பம் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
சத்தியமங்கலம்:
தொடர் மழையால் திம்பம் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த புலிகள் காப்பகம் பண்ணாரி முதல் புளிஞ்சூர் வரை அடர்ந்த வனப்பகுதிகள் கொண்டது.
வனப்பகுதியின் மத்தியில் திம்பம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு புலி, கரடி, சிறுத்தை, மான் மற்றும் யானைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்த மலைப்பாதை வழியாக தினமும் சத்திய மங்கலம், ஈரோடு, உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கார், வேன், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் என ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
மேலும் கர்நாடகாவுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் இந்த வழியாக எப்போதும் வாகன போக்கு வரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் திம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசு மையாக காட்சி அளிக் கிறது. வனப்பகுதிகளில் காய்ந்து கிடந்த மரம், செடி கொடிகள் தொடர் மழை காரணமாக துளிர்ந்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.
மேலும் அதிகாலை நேரத்தில் வனப்பகுதிகளில் பனி பொழிவு இருந்து வருகிறது. இதனால் பனி படர்ந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. வனப்பகுதிகளில் சீதோஷன நிலை நிலவுவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இதை கண்டு ரசித்தப்படி சென்று வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை 497 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நாளை 497 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இந்நிலையில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 497 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
நாளை மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1988 பணிய £ளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2&ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
ஈரோட்டில் நேற்று நடந்த பூஸ்டர் தடுப்பூசி முகாமில் 512 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
வேட்புமனு தாக்கல் செய்தல், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், வேட்பு மனுக்களை திரும்ப பெறுதல், சின்னங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகியவை கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்திட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் மாநகராட்சி பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்களிலும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்களிலும், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங் களிலும் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
19-ந்தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் அதாவது 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைத்து பதவி இடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகளில் சாய்வுதளம், சக்கர நாற்காலி மற்றும் துணையாள் ஆகியவை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பதற்றம் நிறைந்தவாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமிரா, நுண்பார்வையாளர்கள், இணையதளகாண் காணிப்பு ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.
எனவே மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச் சாவடிகள் வாக்குப்பதிவு பொருட்களை பா துகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறவும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் ஒரே நாளில் 1,314 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்புடன் 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் ஒரே நாளில் 1,314 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்புடன் 8 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7&ந் தேதி முதல் தினசரி பாதிப்பு 100&ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1,314 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 15 பேருக்கு கூடுதலாகும்.
இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 437 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 898 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 722 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 8,137 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரோட்டில் இன்று காலை மாநகராட்சி குப்பை லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று காலை மாநகராட்சி குப்பை லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், லாரிகள் மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பயோ மைனிங் சென்டர்கள் எனப்படும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவாநகரில் உள்ள பயோ மைனிங் மையத்திற்கு 49-வது வார்டில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. குடியிருப்பு பகுதிகள் அருகில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
கடந்த சில நாட்களாக சக்தி நகா, பெரியார் நகர், சூரம்பட்டிவலசு உள்ளிட்ட வெளி பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் ஜீவாநகர் பயோ மைனிங் சென்டருக்கு லாரிகள் மூலம் குப்பைகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும், குறிப்பாக ஈ, கொசு தொல்லை அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் இன்று காலை குப்பை கிடங்கினை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும், வெளியிடங்களில் இருந்து குப்பைகள் ஏற்றி வருவதை கண்டித்தும் மாநகராட்சி குப்பை லாரியை ஜீவாநகர் பகுதியில் தடுத்து சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குப்பை கிடங்கில் முற்றுகை யிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வெளியிடங்களில் இருந்து குப்பைகள் இந்த பகுதிக்கு இனி கொண்டுவரப்பட மாட்டாது என்று கூறியதையடுத்து பொதுமக்கள் போராட்டம் கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.






