என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது. நேற்று 3-வது நாளாக பரவலாக மழை கொட்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது. நேற்று 3-வது நாளாக பரவலாக மழை கொட்டியது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது.

    நேற்று 3-வது நாளாக பரவலாக மழை கொட்டியது. ஈரோட்டில் நேற்று மாலை 6 மணிக்கு மேக மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணி அளவில் இடி&மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சுமார் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டியது.  தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

    இதனால் ரோடுகளில் மழை வெள்ளம பெருக் கெடுத்து ஓடியது. மேலும் ஒரு சில இடங்களில் மின் சாரம் துணடிக்கப்பட்டது. இதனால் இரவு முழுவதும் மக்கள் தூக்கமின்றி தவித்தனர்.

    இதே போல் கோபி, நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த மழை கொட்டியது. தொடர் ந்து இரவு 11 மணி வரை பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. கூகலூர் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. நள்ளிரவு வரை மின்சாரம் இல்லாத தால் மக்கள் அவதி அடைந்தனர்.

    மேலும் கவுந்தப்பாடி, சலங்கபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இரவு  7 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து 11 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடி பகுதியில் 86.2 மி.மீ. மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

    மேலும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி களில் நேற்று இரவு 7 மணி முதல் சுமார் 1 மணி நேரத் துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் தட்டு தடுமாறி மெல்லமாக  சென்றது.

    மேலும் சில வாகனங்கள் செல்ல முடியாமல் ரோட் டோரங்களில் நிறுத்தப் பட்டன. மழை குறைந்த பிறகு வாகனங்கள் சென்றன. மேலும் பர்கூர், தாமரைக் கரை உள்பட மலை கிராமங் களிலும் பரவலாக மழை பெய்தது. பெருந்துறை பகுதியில் இரவு சுமார் 2 மணி நேரம் மழை தூறியது.

    இதே போல் டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, பங்களாபுதூர், ஆப்பக்கூடல், அத்தாணி உள்பட பல பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து விடிய விடிய மழை தூறி கொண்டே இருந்தது.

    மேலும் கொடுமுடி, பவானி, சித்தோடு, சென்னி மலை மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் இரவு குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட் டரில் வருமாறு: ஈரோடு-14, பெருந்துறை-18, பவானி-31, கோபி-11.2, சத்தி-6, பவானிசாகர்-12.6, தாளவாடி-4.5, நம்பியூர்-24, சென்னிமலை-5, கவுந்தப்பாடி-86.2, அம்மாபேட்டை-11, கொடிவேரி-24, குண்டேரிபள்ளம்-28.8, வரட்டுபள்ளம்-8.
    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணைக்கு சென்ற போது கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணைக்கு சென்ற போது கார், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி அருகே உள்ள வாய்க்கால் ரோடு ஸ்ரீராம் புரத்தை சேர்ந்தவர் நவீன்ராஜ் (வயது 32). இவரது மனைவி கயல்விழி (26). நவீன்ராஜ் கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே பள்ளியில் வேன் டிரைவராக குப்புராஜ் என்பவரும் வேலை பார்த்து வருகிறார். கும்பராஜிக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும், வைசாலி (8) என்ற மகளும், ஹரி விஷ்ணு (4) என்ற மகனும் உள்ளனர்.

    நவீன் ராஜ், குப்புராஜ் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கூடலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் கொடிவேரி அணைக்கு குளிக்க சென்றனர்.

    நவீன்ராஜ் தனது மனைவி கயல்விழி மற்றும் குப்புராஜ் மகள் வைசாலி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், குப்புராஜ், தனது மனைவி சிவகாமி, மகன் ஹரி விஷ்ணு ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் கொடிவேரி அணையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காசி பாளையம் அருகே உள்ள காந்தி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கோபி நோக்கி வந்த காரும், நவீன்ராஜ் மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. 

    இதில் மோட்டார்சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட கயல்விழியும், வைசாலியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். நவீன்ராஜ் படுகாயம் அடைந்தார்.

    அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாய மடைந்த நவீன்ராஜை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் உயிரிழந்த கயல்விழி மற்றும் சிறுமி வைசாலி ஆகியோரின் உடலை கடத்தூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கயல்விழி, வைசாலி உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அந்தியூர் பகுதியில் மழை பரவலாக பெய்து கொண்டு இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்சு கவிழ்ந்து பெண் பலியானார்.
    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் மழை பரவலாக பெய்து கொண்டு இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்சு கவிழ்ந்து பெண் பலியானார்.

     ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (30). இவரது மனைவி திவ்யா (23).  நிறைமாத கர்பிணியான திவ்யாவுக்கு   கடந்த 12-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் திவ்யாவை சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தைக்கு நேற்று  இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் அறிவுறுத்-தினார்.

    இதனை தொடர்ந்து  தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை எடுத்துக் கொண்டு விவேகானந்தன்,  அவரது தாய் மல்லிகா, பெரியம்மாள் அய்யம்மாள் (55),  தவிட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி நர்சு ஜோதிமணி (27) ஆகியோர் ஆம்புலன்சில்  ஈரோட்டுக்கு புறப்பட்டனர்.

    ஆம்புலன்சை அந்தியூரைச் சேர்ந்த மாபு பாஷா (21) என்பவர் ஓட்டிச் சென்றார். ஆம்புலன்சு அந்தியூர் அடுத்த பருவாச்சி பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது அந்த பகுதியில் மழை பரவலாக பெய்து கொண்டு இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்சு கவிழ்ந்து விபத்தானது. 

    இதில் சம்பவ இடத்தி-லேயே அய்யம்மாள்  உடல் நசுங்கி பலியானார். விவேகானந்தன், ஆம்புலன்சு டிரைவர் மாபு பாஷா, தனியார் ஆஸ்பத்திரி நர்சு ஆகியோருக்கு தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்தில் விவேகானந்தனின் தாய் மல்லிகா மற்றும் குழந்தை ஆகியோர் சிறு காயம் கூட அடையாமல் தப்பினர்.
    பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் திடீரென தற்கொலை செய்வதாக கூறி சென்றதால் போலீசார் மத்தியில் பரபரப்பு நிலவியது.
    ஈரோடு:

    ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாதேவி (44). இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு பணியிடம் மாறுதலாகி வந்தார்.

    ஈரோடு சூரம்பட்டி வலசு காந்திஜி வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாகவே பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்ரம்-உஷாநந்தினி என்கிற காதல் கலப்பு திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் நீலாதேவி இருவீட்டு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உஷாநந்தினி பெற்றோரிடம் செல்ல விரும்பவில்லை என்றும் விக்ரமுடன் செல்வதாகவும் உறுதியாக கூறினார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் வழக்கம்போல் சமரசம் செய்து வைத்து காதல் ஜோடியை ஒன்றாக அனுப்பி வைத்தனர். அந்த காதல் ஜோடி காரில் புறப்பட்டு சென்றபோது கள்ளுக்கடை மேடு என்ற பகுதியில் 3 கார்களில் வந்த உஷா நந்தினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விக்ரமை தாக்கி உஷா நந்தினியை கடத்தி சென்றனர்.

    இது குறித்த தகவலை இன்ஸ்பெக்டர் நீலாதேவி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த புதுமண தம்பதியை போதிய பாதுகாப்பின்றியும், பெண் வீட்டாரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் எவ்வித முன்னேற்பாடும் இன்றி அனுப்பியதால் தான் இந்த சம்பவம் நடந்ததாக உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் நீலாதேவியை போனில் தொடர்பு கொண்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இன்ஸ்பெக்டர் நீலாதேவி கடந்த 2 நாட்களாக மன உளைச்சலுடன் சரியாக தூங்காமல் இருந்துள்ளார். நேற்று காலை ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் நீலாதேவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது மனவேதனையுடன் இருந்த நீலாதேவி திடீரென வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களை அருகிலுள்ள மற்றொரு போலீசாரிடம் கொடுத்துவிட்டு நான் சாகப் போகிறேன் என்று கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நீலாதேவி வீட்டிற்கு சென்று சாதாரண உடையை மாற்றிவிட்டு சோலாரில் உள்ள தனது தோழி வீட்டுக்கு மொபட்டில் சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது தோழி அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறிய இன்ஸ்பெக்டர் நீலாதேவி இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார். பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் திடீரென தற்கொலை செய்வதாக கூறி சென்றதால் போலீசார் மத்தியில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நீலாதேவியிடம் இன்று உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். எதற்காக அவர் தற்கொலை செய்வதாக கூறி சென்றார் என்று அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதற்கிடையே இன்ஸ்பெக்டர் நீலாதேவி விடுமுறையில் செல்லப்போகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
    தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட--தாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.
    கோபி:

    தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடிவேரி அணையில் தண்ணீர் அருவி போல் கொட்டுவதால் பண்டிகை காலங்கள்,

    விடுமுறை நாட்களில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்பட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்,

    இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதாலும்,

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்ப-டுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.
     
    அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்தும், தங்கள் குழந்தைகளுடன் செல்பி எடுத்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனர்,

    தொடர்ந்து மாலை நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதால் அணையின் மேல்பகுதியில் உள்ள மணல் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தும்,அங்கு விற்கப்படும் மீன்களை வாங்கி உண்டும் சுற்றுலாப்பயணிகள்  மகிழ்ந்தனர்.

    நம்பியூர் அருகே தம்பி இறந்த சோகத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே தம்பி இறந்த சோகத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் அடுத்த கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). விவசாயி. 

    இவரது மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளான். மேலும் கவுசல்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கவுசல்யா வின் தம்பி நிதியரசன் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத னால் கவுசல்யா மன  வருத்தத்தில் இருந்து வந்தார்.
     
    மேலும் அவரது தம்பி படத்தை தினமும் பார்த்து அழுது கொண்டே இருந்தார். தொடர்ந்து பாசமாக இருந்த தம்பி இறந்து விட்டானே? என நினைத்து புலம்பி கொண்டே இருந்தார்.

    இதனால் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கவுசல்யாவுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கவுசல்யா வீட்டில் திடீரென தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர் கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Erode News Bhavani Sangameshwarar Temple Election Festival,பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேர்திருவிழா
    பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேர்திருவிழா

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி இன்று காலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் நடந்தது.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

    விழாவையொட்டி இன்று காலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த னர். தேர் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக  சென்று மீண்டும் பவானி கூடுதுறையை வந்தடைந்தது.

    முன்னதாக இன்று அதி காலை ஆதிகேசவபெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆதிகேசவபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடந்த 2 ஆண்டுகளில், பஞ்சு விலை ஒரு கண்டி எனப்படும் 356 கிலோ, ரூ.43 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது.
    ஈரோடு:

    நாடு முழுவதும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளிகளை உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், காட்டனை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வரக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் ஜவுளி உற்பத்தி கடைகளும், அதனை சார்ந்த நிறுவனங்கள் என 4 ஆயிரம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ் காம்பவுண்ட், திருவேங்கடவீதி போன்ற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. கடை முன்பு நூல் விலை உயர்வை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் என்கிற வாசகம் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைசெல்வன் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளில், பஞ்சு விலை ஒரு கண்டி எனப்படும் 356 கிலோ, ரூ.43 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது. பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த பல்வேறு ஜவுளி சார்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர், ஜவுளித்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய நெருக்கடியாகவும், தொழில் அழியும் அபாயத்துக்கு கொண்டு செல்கிறது. இத்தொழிலை காப்பாற்றும் நோக்கத்தில், பஞ்சு, நூல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    காட்டன் நூலை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வந்து நூல் விலையை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநகர் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இந்த போராட்டத்தின் காரணமாக ரூ.50 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அந்தியூர் அருகே பிறந்த குழந்தையை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது ஆம்புலன்சு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உடல் நசுங்கி பலியானார்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அண்ணா மடுவு பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (30). இவரது மனைவி திவ்யா (23). நிறைமாத கர்பிணியான திவ்யாவுக்கு கடந்த 12-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் திவ்யாவை சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தைக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் அறிவுறுத்தினார்.

    இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை எடுத்துக் கொண்டு விவேகானந்தன், அவரது தாய் மல்லிகா, பெரியம்மாள் அய்யம்மாள் (55), தவிட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி நர்சு ஜோதிமணி (27) ஆகியோர் ஆம்புலன்சில் ஈரோட்டுக்கு புறப்பட்டனர்.

    ஆம்புலன்சை அந்தியூரைச் சேர்ந்த மாபு பாஷா (21) என்பவர் ஓட்டிச் சென்றார். ஆம்புலன்சு அந்தியூர் அடுத்த பருவாச்சி பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பரவலாக பெய்து கொண்டு இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்சு கவிழ்ந்து விபத்தானது.

    இதில் சம்பவ இடத்திலேயே அய்யம்மாள் உடல் நசுங்கி பலியானார். விவேகானந்தன், ஆம்புலன்சு டிரைவர் மாபு பாஷா, தனியார் ஆஸ்பத்திரி நர்சு ஆகியோருக்கு தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் விவேகானந்தனின் தாய் மல்லிகா மற்றும் குழந்தை ஆகியோர் சிறு காயம் கூட அடையாமல் தப்பினர்.
    ஈரோட்டில் மனைவியை கடத்தியதாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெற்றோர் உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் (24). அதே பகுதியில் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த உஷா நந்தினி (24) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் விக்ரம், உஷா நந்தினி வீட்டை விட்டு வெளியேறி பவானியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நீலாதேவி விசாரித்தார். அவர் இது குறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். இரு வீட்டு பெற்றோரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் உஷா நந்தினி தனது கணவருடன் தான் செல்வேன் என்று கூறினார். பெண் மேஜர் என்பதால் உஷாநந்தினியை அவர் கணவருடன் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

    அங்கிருந்து சென்ற புதுமண தம்பதிகள் கள்ளுக்கடை மேட்டில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் என 30 பேர் 3 கார்களில் அங்கு வந்து விக்ரமை தாக்கி உஷா நந்தினியை காரில் கடத்தி சென்றனர்.

    இது குறித்து விக்ரம் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார். அதன்பேரில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையில் தனிப்படை போலீசார் பெண்ணை மீட்பதற்காக சென்றனர்.

    இதற்கிடையே உஷா நந்தினி கடத்தப்பட்டதாக விக்ரம் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் உஷா நந்தினியின் பெற்றோர், சகோதரர், அவரது உறவினர் உட்பட 30 பேர் மீது கூட்டமாக கூடுதல், பெண்ணை கடத்துதல், தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, வாகனத்தை வழிமறித்தது உள்பட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இதற்கிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட உஷா நந்தினியை அவரது வீட்டிலிருந்து சூரம்பட்டி போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தான் தனது பெற்றோருடன் செல்வதாக உஷாநந்தினி கூறினார்.

    இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். பின்னர் உஷாநந்தினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதனை ஏற்று அவர் பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து உஷா நந்தினி தனது பெற்றோருடன் சென்றார்.
    மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையத்தில் காவிரியாற்றின் நடுவே மிகவும் பிரசித்தி பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையத்தில் காவிரியாற்றின் நடுவே மிகவும் பிரசித்தி பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையத்தில் காவிரியாற்றின் நடுவே மிகவும் பிரசித்தி பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 1&ந் தேதி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஸ்ரீவிநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சித்திரை முதல் நாளான இன்று காலை 5 மணி முதல் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையிலே  பக்தர்கள் கூட்டம் குவிய தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நட்டாற்றீஸ்வரை வழிபட்டனர்.

    சித்திரை திருவிழாவிற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கம்பங்கூழ் வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு 25 மூட்டை கம்பு, 250 லிட்டர் தயிர், எலுமிச்சம்பழம், இஞ்சி பொடி கலந்த கம்பங்கூழ் தயார் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுமார் 70ஆயிரம் பக்தர்களுக்கு தேவையான கம்பங்கூழ் பிரசாதம் தயார் செய்யப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

    விழாவிற்கு சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் காவிரியாற்றின் மறுகரையான பட்லூரிலிருந்து பரிசல்கள் மூலம் கோவிலுக்கு வந்து நட்டாற்றீஸ்வரரை வழிபட்டு செல்வர்.

    இந்த ஆண்டு காவிரியாற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தாலும் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் தண்ணீரில் இறங்கி நடந்து கோவிலுக்கு வந்து செல்ல அனுமதிக்கவில்லை. பரிசல்களை பயன்படுத்தி பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.

    விழா ஏற்பாடுகளை நட்டாற்றீஸ்வரர் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். ஈரோட்டிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    டி.என்.பாளையம் அருகே பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

     டி.என்.பாளையம் அருகே உள்ள  கொண்டையம் பாளையம் சம்பன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர் சம்பவத்தன்று  கொண்டையம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொன்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கொண்டையம் பாளையம் புதுக்காலனி இந்திரா நகரை சேர்ந்த பஞ்சயப்பன் (24) என்பவர் ரமேஷிடம் செலவுக்கு 500 ரூபாய் பணம் கேட்டு உள்ளார். அதற்கு ரமேஷ் மறுத்துள்ளார்.

    உடனே பணம் கொடுக்க மறுத்த ரமேசை பஞ்சயப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 எடுத்து சென்று விட்டதாக கூறப்ப டுகிறது.

    இச்சம்பவம் குறித்து ரமேஷ் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஞ்சயப்பனை கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×