என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடந்து நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள்.
    X
    பரிசல் மூலம் காவிரி ஆற்றை கடந்து நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள்.

    காவிரி ஆற்றில் பரிசலில் வந்து நட்டாற்றீஸ்வரரை வழிபட்ட பக்தர்கள்

    மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையத்தில் காவிரியாற்றின் நடுவே மிகவும் பிரசித்தி பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையத்தில் காவிரியாற்றின் நடுவே மிகவும் பிரசித்தி பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையத்தில் காவிரியாற்றின் நடுவே மிகவும் பிரசித்தி பெற்ற நட்டாற்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 1&ந் தேதி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஸ்ரீவிநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சித்திரை முதல் நாளான இன்று காலை 5 மணி முதல் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலையிலே  பக்தர்கள் கூட்டம் குவிய தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நட்டாற்றீஸ்வரை வழிபட்டனர்.

    சித்திரை திருவிழாவிற்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கம்பங்கூழ் வழங்குவது வழக்கம்.

    இந்த ஆண்டு 25 மூட்டை கம்பு, 250 லிட்டர் தயிர், எலுமிச்சம்பழம், இஞ்சி பொடி கலந்த கம்பங்கூழ் தயார் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுமார் 70ஆயிரம் பக்தர்களுக்கு தேவையான கம்பங்கூழ் பிரசாதம் தயார் செய்யப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

    விழாவிற்கு சேலம், திருச்செங்கோடு, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் காவிரியாற்றின் மறுகரையான பட்லூரிலிருந்து பரிசல்கள் மூலம் கோவிலுக்கு வந்து நட்டாற்றீஸ்வரரை வழிபட்டு செல்வர்.

    இந்த ஆண்டு காவிரியாற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தாலும் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் தண்ணீரில் இறங்கி நடந்து கோவிலுக்கு வந்து செல்ல அனுமதிக்கவில்லை. பரிசல்களை பயன்படுத்தி பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.

    விழா ஏற்பாடுகளை நட்டாற்றீஸ்வரர் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். ஈரோட்டிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×