என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு, வீரப்பன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது23). ஆட்டோ டிரைவர்.
மணிவண்ணன் குடித்து விட்டு ஊதாரிதனமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது கள்ளக்காதல் விஷயம் மணிவண்ணன் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடுமாறு கூறி பாட்டி வீட்டுக்கு மணிவண்ணனை அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் மணிவண்ணன் அந்த பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மணிவண்ணன் அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் கடுமையாக திட்டி கொண்டனர்.
மணிவண்ணன் திடீரென அந்த பெண்ணை வீட்டில் இருந்து வெளியே தள்ளி வீட்டு கதவை உள்புறமாக பூட்டி கொண்டார்.
ஏதோ அசம்பாவீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அந்த பெண் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பெட்ரூமில் மணிவண்ணன் தூக்குபோட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மணிவண்ணன் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சியில முனியப்பன்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முனியப்பன் பாளையத்திலிருந்து வெள்ளாளபாளையம் வரை சுமார் 700 மரக்கன்றுகள் கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பட்டது.
பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவம் வகையிலும் மழை வளம் குறித்த அவசியத்தை அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த மரக்கன்றுகள் நட்டப்பட்டன.
தற்போது அந்த மரக்கன்றுகள் வளர்ந்து வரும் நிலையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அந்த மரக்கன்றுகள் மீது திரவகத்தை ஊற்றி விட்டு சென்றுள்ளனர். இதனால் மரக்கன்றுகள் கருகின.
இது குறித்து கேள்விப்பட்டதும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கருகிய மரக்கன்றுகளை பார்த்து வேதனையுடன் செல்கிறார்கள். திராவகம் ஊற்றி சென்ற மர்மநபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலோர் தீபாவளிக்கு புதிய ஜவுளிகளை வாங்கி விட்டார்கள்.
இப்போது ஜவுளி கடைகள் போல் பட்டாசு கடைகளில் மக்கள் கூட்டம் மொய்க்க தொடங்கி உள்ளது. இதற்காக ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு உள்ளது.
ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என பொது மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம், வருடா வருடம் பொது மக்கள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஓலி மாசு, அதிக ஒலி ஏற்படுத்தும் வெடியால் ஏற்படும் தீமைகள் மற்றும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் சுற்றுப்புறக்காற்று மாசுபடுதல் போன்றவைகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநகரத்தில் வாகனங்கள் மூலமாக விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளிக்கு முன் மற்றும் தீபாவளி தினம் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஒசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மாசு ஆய்வு நடத்தப்பட உள்ளது.
உச்சநீதி மன்றத்தின் அறிவுரையை பின்பற்றி பட்டாசு குறித்து உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு:-
விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யபடும் பட்டாசுகளின் வகைகள் ஒவ்வொரு பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் அவற்றின் அளவுகள் மற்றும் அதனை வெடிக்கும் போது அவை ஏற்படுத்தும் ஒலி மாசு அளவுகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
அதிக பட்ச ஒலி அளவான 125 டெசிபல் மேல் ஏற்படுத்தும் எந்த ஒரு பட்டாசும் விற்பனை செய்யக்கூடாது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கண்டிப்பாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. உச்ச நீதிமன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்க கூடாது.
இவ்வாறு கலெக்டர் பிரபாபர் கூறினார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிவாசன் மற்றும் போலீசார் கணக்கம் பாளையம் பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரே மொபட்டில் 3 பேர் வந்துள்ளனர். அந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தனித்தனியே துருவி துருவி விசாரணை செய்ததில் 3 பேரும் இரு சக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் குமார் என்ற ஜெயக் குமார் (வயது 40), குமரன் கோவில் வீதி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற ஜெயராஜ் (38), வெள்ளியங்கிரி (36) என தெரிய வந்தது. 3 பேரும் சேர்ந்து டி.என்.பாளையம் பகுதி மத்தாளக் கோம்பு பகுதியில் ஒரு வண்டியும் நஞ்சை புளியம்பட்டி வாய்க்கால் கரை யோரம் ஒரு வண்டியும், அளுக் குளி பகுதியில் ஒரு வண்டியும் என பல்வேறு பகுதிகளிலிருந்து திருடியதை ஒப்புக் கொண்டனர்.
திருடிய வாகனங்களை கோபி- அத்தாணி சாலையில் உள்ள புதர்மறைவில் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. பிடிபட்ட 3 பேரிடமிருந்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு, சென்னிமலை ரோட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் போவை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஓய்வு பெற்ற அரசு கோக்குவரத்து ஊழியர்கள் சுமார் 15 பேர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் கூறும்போது:-
ஈரோடு மண்டலத்தில் மட்டும் தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 800 பேர் வரை உள்ளோம். தற்போது தீபாவளியை முன்னிட்டு போன்ஸ் அறிவிக்கப்பட் டுள்ளது.
நேற்று முன்தினம் போனஸ் தொகையை வாங்க வந்தோம். நாளை வாருங்கள் என்றனர். நேற்று வந்தால் இன்று வாருங்கள் என்றார்கள். இன்று வந்து கேட்டால் உங்கள் போனசை தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி விடுகிறோம் என்கிறார்கள். எங்களை வேண்டுமென்றே அலக்கழிக்கிறார்கள்.
எங்கள் வங்கி கணக்கில் ஓய்வூதியம் வருகிறது. அதே போன்று போன்ஸ் தொகையையும் எங்கள் வங்கி கணக்கில் போடலாம் அல்லது போன்ஸ் காசோலையை எங்களிடமே நேரடியாக கொடுக்கலாம். அதை விட்டு விட்டு தபாலில் அனுப்புவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
போதிய மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நிலைமை கருதி இந்த ஆண்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அணையில் இருந்து 2300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடந்த மாதம் 25-ந்தேதி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக இருந்தது. இதன்பிறகும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தொடர்ந்து 53 அடியாகவே நீர்மட்டம் உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53. 42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 383 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2450 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் உயராமல் தொடர்ந்து 53 அடியாகவே உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை வருகிற 27-ந்தேதி தொடங்கும் என்று வானிலை இலாகா அறிவித்து உள்ளது. இந்த வடகிழக்கு பருவ மழையாவது போதிய அளவில் பெய்து பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி நீர்மட்டம் உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
ஈரோடு:
வெளளோடு அருகே உள்ள கொம்பனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி வசந்தி (வயது 19). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் ஆகி 7 மாதம் ஆகிறது.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வசந்தி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மாரியப்பன் அங்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். இதற்கு வசந்தி மறுத்து விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வசந்தி தற்கொலை செய்வதற்காக சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்தார்.
இதன்பிறகு அவர் வீட்டில் தூக்கு போட்டு கொண் டார். சத்தம் கேட்டு வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் தொங்கு வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவரை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் வசந்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
வெள்ளோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சேர்ந்தவர் அம்பாராம். இவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் காந்தகுமாரி (வயது 19).
சம்பவத்தன்று ஜவுளிக் கடைக்கு வந்த காந்தகுமாரி பிறகு வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.
எனவே இது பற்றி அம்பாராம் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் காணாமல் போன தனது மகள் காந்தகுமாரியை கண்டுபிடித்து கொடுக்கும் படி கூறி உள்ளார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
வெளளோடு அருகே உள்ள கொம்பனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி வசந்தி (வயது 19).
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணம் ஆகி 7 மாதம் ஆகிறது.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வசந்தி கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மாரியப்பன் அங்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். இதற்கு வசந்தி மறுத்து விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வசந்தி தற்கொலை செய்வதற்காக சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்தார்.
இதன்பிறகு அவர் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். சத்தம் கேட்டு வந்த பெற்றோர் தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவரை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் வசந்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
வெள்ளோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேட்டில் தண்ணீர் சீறி சென்று கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரை பார்த்ததும் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மகிழ்ச்சியில் நேற்று மாலை சோகமான ஒரு சம்பவமும் நடந்து விட்டது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி சிந்தாமணி பகுதியை சேர்ந்த மாரப்பன் என்கிற கண்ணன் என்பவரது மகன் சரவணன் (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பயோ கெமிஸ்டிரி 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
தினமும் கல்லூரிக்கு பஸ்சில் வந்து செல்லும் இவர் நேற்று காலை கல்லூரிக்கு வந்து விட்டு அங்கிருந்து மதியம் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட நிலையில் அப்பகுதியில் நேற்று காலை தான் தண்ணீர் வந்து சேர்ந்தது.
இதனால் மாணவர்கள் ரோட்டை விட்டு சற்று ஒதுக்குப்புறமான பகுதியில் இவர்கள் அனைவரும் மதியம் 2 மணியளவில் ஆவலுடன் குளிக்க சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத சரவணன் தண்ணீருக்குள் சற்றே ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.
இதனால் தண்ணீருக்குள் திடீரென மூழ்கினார். இதனைக்கண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற போராடினர். கதறினர், பரிதவித்தனர் அங்கும் இங்கும் ஓடினர். அக்கம் பக்கத்தினர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்களும் முயன்று பார்த்தும் முடியாமல் போய் வந்தனர். தங்கள் கண் எதிரே நண்பனை பறிகொடுத்த மற்ற மாணவர்கள் அழுத காட்சி உலுக்கியது.
பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீருக்குள் மூழ்கி நீண்ட நேரம் தேடினர். இவர்களுடன் பவானி பரிசல் துறையை சேர்ந்த மீனவர்களும் சரவணனை தேடினர். சுமார் 5 மணியளவில் அதே பகுதியில் சற்று தொலைவில் சரவணனின் உடலை மீட்டனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோபியில் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. கட்சியை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கு முத்தாய்ப்பாக 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்தவுடனேயே பாஜக அதற்கான பொறுப்பாளர்களை நியமித்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள்.
தேர்தலை நடுநிலையோடும் நியமாகவும், நேர்மையாகவும் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். திமுக, அதிமுக வேட்பாளர்கள் பல குற்ற பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். ஆனால், பாஜக வேட்பாளர்கள் நேர்மையாக இந்த தேர்தலை சந்திக்க உள்ளனர். ஊழலற்ற நிர்வாகத்தை தரவுள்ளோம். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் உள்ளே செல்ல கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சரியில்லை. எதிர்கட்சியோ தொடர்ந்து வெளிநடப்பு செய்யும் கட்சியாக உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு முன்பே தமிழகத்திற்கு தேர்தல் வரலாம் என ஸ்டாலின் கூறி வருகிறார். இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. காவிரி பிரச்சனை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட தி.மு.க.விற்கு தார்மீக உரிமையில்லை.
பிரதமர் ஏன் உடல் நலம் இல்லாமல் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க வரவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கேட்கிறார். இவர் அக்கட்சியின் தலைவரா? அல்லது அ.தி.மு.க வின் தலைவரா? என்பது தெரியவில்லை.
முதல்வரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்யாதீர்கள். 3 தொகுதி இடைத்தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிப்பதாக வைகோ அறிவித்துள்ளார். எதற்காக செய்கிறார்கள் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
பவானியை அடுத்த சோவராயன்பாளையம், தேற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது85).
சம்பவத்தன்று தங்கவேல் முதியோர் உதவி தொகை வாங்குவதற்காக திப்பி செட்டிபாளையத்திலிருந்து ஆப்பக்கூடல்-பவானி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வகையில் தங்கவேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையின் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.
அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






