என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே மரக்கன்றுகள் மீது திராவகம் ஊற்றிய மர்ம நபர்கள்: கன்றுகள் கருகிய அவலம்
    X

    ஆப்பக்கூடல் அருகே மரக்கன்றுகள் மீது திராவகம் ஊற்றிய மர்ம நபர்கள்: கன்றுகள் கருகிய அவலம்

    ஆப்பக்கூடல் அருகே மரக்கன்றுகள் மீது திராவகம் ஊற்றிய மர்ம நபர்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சியில முனியப்பன்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

    ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முனியப்பன் பாளையத்திலிருந்து வெள்ளாளபாளையம் வரை சுமார் 700 மரக்கன்றுகள் கடந்த சில நாட்களுக்கு முன் நடப்பட்டது.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவம் வகையிலும் மழை வளம் குறித்த அவசியத்தை அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த மரக்கன்றுகள் நட்டப்பட்டன.

    தற்போது அந்த மரக்கன்றுகள் வளர்ந்து வரும் நிலையில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அந்த மரக்கன்றுகள் மீது திரவகத்தை ஊற்றி விட்டு சென்றுள்ளனர். இதனால் மரக்கன்றுகள் கருகின.

    இது குறித்து கேள்விப்பட்டதும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கருகிய மரக்கன்றுகளை பார்த்து வேதனையுடன் செல்கிறார்கள். திராவகம் ஊற்றி சென்ற மர்மநபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×