என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அரசு போக்குவரத்து அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் போனஸ் தொகை கேட்டு தர்ணா
    X

    ஈரோடு அரசு போக்குவரத்து அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் போனஸ் தொகை கேட்டு தர்ணா

    ஈரோடு அரசு போக்குவரத்து அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் போனஸ் தொகை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு, சென்னிமலை ரோட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் போவை மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஓய்வு பெற்ற அரசு கோக்குவரத்து ஊழியர்கள் சுமார் 15 பேர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் கூறும்போது:-

    ஈரோடு மண்டலத்தில் மட்டும் தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 800 பேர் வரை உள்ளோம். தற்போது தீபாவளியை முன்னிட்டு போன்ஸ் அறிவிக்கப்பட் டுள்ளது.

    நேற்று முன்தினம் போனஸ் தொகையை வாங்க வந்தோம். நாளை வாருங்கள் என்றனர். நேற்று வந்தால் இன்று வாருங்கள் என்றார்கள். இன்று வந்து கேட்டால் உங்கள் போனசை தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி விடுகிறோம் என்கிறார்கள். எங்களை வேண்டுமென்றே அலக்கழிக்கிறார்கள்.

    எங்கள் வங்கி கணக்கில் ஓய்வூதியம் வருகிறது. அதே போன்று போன்ஸ் தொகையையும் எங்கள் வங்கி கணக்கில் போடலாம் அல்லது போன்ஸ் காசோலையை எங்களிடமே நேரடியாக கொடுக்கலாம். அதை விட்டு விட்டு தபாலில் அனுப்புவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    Next Story
    ×