என் மலர்
செய்திகள்

கள்ளக்காதலி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
ஈரோடு:
ஈரோடு, வீரப்பன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது23). ஆட்டோ டிரைவர்.
மணிவண்ணன் குடித்து விட்டு ஊதாரிதனமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது கள்ளக்காதல் விஷயம் மணிவண்ணன் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடுமாறு கூறி பாட்டி வீட்டுக்கு மணிவண்ணனை அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் மணிவண்ணன் அந்த பெண் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மணிவண்ணன் அந்த பெண் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் கடுமையாக திட்டி கொண்டனர்.
மணிவண்ணன் திடீரென அந்த பெண்ணை வீட்டில் இருந்து வெளியே தள்ளி வீட்டு கதவை உள்புறமாக பூட்டி கொண்டார்.
ஏதோ அசம்பாவீதம் நடக்க போகிறது என்பதை உணர்ந்த அந்த பெண் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பெட்ரூமில் மணிவண்ணன் தூக்குபோட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மணிவண்ணன் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.






