என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு அருகே ஜவுளி கடையில் வேலை பார்க்கும் பெண் மாயம்
    X

    ஈரோடு அருகே ஜவுளி கடையில் வேலை பார்க்கும் பெண் மாயம்

    ஈரோடு அருகே ஜவுளி கடையில் வேலை பார்க்கும் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சேர்ந்தவர் அம்பாராம். இவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் காந்தகுமாரி (வயது 19).

    சம்பவத்தன்று ஜவுளிக் கடைக்கு வந்த காந்தகுமாரி பிறகு வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.

    எனவே இது பற்றி அம்பாராம் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் காணாமல் போன தனது மகள் காந்தகுமாரியை கண்டுபிடித்து கொடுக்கும் படி கூறி உள்ளார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×