என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு சக்கர வாகன திருடர்கள் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர்.
    X

    இரு சக்கர வாகன திருடர்கள் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர்.

    இரு சக்கர வாகனங்களை திருடி புதர் மறைவில் மறைத்து வைத்திருந்த திருடர்களை வாகன சோதனையில் போலீசார் கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிவாசன் மற்றும் போலீசார் கணக்கம் பாளையம் பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஒரே மொபட்டில் 3 பேர் வந்துள்ளனர். அந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தனித்தனியே துருவி துருவி விசாரணை செய்ததில் 3 பேரும் இரு சக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் குமார் என்ற ஜெயக் குமார் (வயது 40), குமரன் கோவில் வீதி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் என்ற ஜெயராஜ் (38), வெள்ளியங்கிரி (36) என தெரிய வந்தது. 3 பேரும் சேர்ந்து டி.என்.பாளையம் பகுதி மத்தாளக் கோம்பு பகுதியில் ஒரு வண்டியும் நஞ்சை புளியம்பட்டி வாய்க்கால் கரை யோரம் ஒரு வண்டியும், அளுக் குளி பகுதியில் ஒரு வண்டியும் என பல்வேறு பகுதிகளிலிருந்து திருடியதை ஒப்புக் கொண்டனர்.

    திருடிய வாகனங்களை கோபி- அத்தாணி சாலையில் உள்ள புதர்மறைவில் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. பிடிபட்ட 3 பேரிடமிருந்து இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×