என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு வளையகார வீதி, வி.வி.சி.ஆர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது52).
கிருஷ்ணன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மனைவியை சேர்த்திருந்தார். கிருஷ்ணன் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்து கவனித்து வந்தனர்.
கிருஷ்ணன் தன் மனைவிக்கு டீ வாங்குவதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து எதிர் புறம் உள்ள ரோட்டை கடந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கிருஷ்ணன் மீது எதிர்பாராத வகையில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கொடுமுடி அருகே ஊஞ்சலூர், தேவம்பாளையம், பெரியார் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். தொழிலாளி. இவரது மனைவி விஜயா(வயது 42).
சம்பவத்தன்று ஆறுமுகம் டீக்கடைக்கு சென்றுவிட்டு டீக்குடித்துவிட்டு திரும்பி வர நேரமாகி விட்டடதாக கூறப்படுகிறது. விஜயா தனது கணவரை திட்டினார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் விஜயா கோபித்து கொண்டு சமையல் அறைக்கு வேகமாக சென்றார்.
அங்கு இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ குளித்தார். இதனால் வேதனை தாங்காமல் விஜயா அலறினார். இதை சற்றும் எதிர்பாராத ஆறுமுகம் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்து விஜயாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி விஜயா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தாளவாடி அடுத்த கரளவாடி அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 33).
சம்பவத்தன்று பசுவண்ணாவும், அவரது அத்தை மகனும் வேலை விசயமாக மோட்டார்சைக்கிளில் பிசில் வாடிக்கு சென்றனர்.
பிறகு அங்கிருந்து பசுவண்ணாவும், அத்தை மகனும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். பசுவண்ணா மோட்டார் சைக்கிளை ஓட்ட அவரது அத்தை மகன் உட்கார்ந்து கொண்டு வந்தார்.
பிசில்வாடி-மெட்டல் வாடி ரோட்டில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி பசுவண்ணா சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத வகையில் மோதியது.
இதில் பசுவண்ணாவிற்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்பு லன்சுக்கு தகவல் கொடுத்து தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பசுவண்ணாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்தில் அவரது அத்தை மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பெதர் ஹசில் (வயது 24).
இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு சென்றார். அங்குள்ள அட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்து வந்தார்.
இதே நிறுவனத்தில் மாலத்தீவை சேர்ந்த ஈனாஸ் அலி (21) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசி தங்களது காதலை வளர்த்து கொண்டனர்.
எவ்வளவு நாள் காதலர்களாகவே இருப்பது. திருமணம் செய்து கொண்டு சந்தோசஷமாக குடும்பம் நடத்தலாம் என்று நினைத்த அவர்கள் இது பற்றி தங்களது பெற்றோர்களிடம் கூறினர்.
ஆனால் பெதர் ஹசில்-ஈனாஸ் அலி ஆகியோரின் காதலுக்கு அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திருமணம் செய்வதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் பெதர் ஹசல் கடந்த ஆகஸ்டு மாதம் ஈரோடு வந்து விட்டார்.
இதனால் ஈனாஸ் அலி தனது காதலனை பார்ப்பதற்காக விமானம் மூலம் ஈரோடு வந்தார்.
இதன் பிறகு காதலர்கள் இருவரும் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலத்தை அடுத்த பங்களாபுதூர் அருகே உள்ள புஞ்சை துறையம் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 54).
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார்.
இவர் தான் சம்பாதித்த பணத்தை பலருக்கு கடன் கொடுத்து உள்ளார். ஆனால் அவர்கள் கடன் வாங்கி பல நாட்களாகியும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது,
இதனால் பெரியசாமி தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கடன் வாங்கியவர்கள் திருப்பி கொடுக்க மறுக்கிறார்களே என்று மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் தோட்டத்தில் உள்ள வீட்டின் முன்புறம் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பங்களா புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட விவசாயி பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
பவானி சாகர் அருகே உள்ள கொத்த மங்கலம் நெரிஞ்சிப்பேட்டை என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 35). தொழிலாளி.
இவரும் சீதா (27) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
மோகன்ராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அவரை கண்டித்த மனைவி சீதா தனது குழந்தைகளுடன் வீட்டுக்குள் சென்று படுத்து கொண்டார்.
அப்போது வீட்டின் முன் உள்ள பந்தலில் மோகன்ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பவானி சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளி. கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றும் இரவு முழுவதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றியது. இதனால் மனைவி வள்ளி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரை துரத்தி கொண்டு கணவர் வந்தார். நடுரோட்டில் மனைவியை ஆவேசமாக பேசிய கண்ணன் நடுரோடு என்றும் பாராமல் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.
இதில் வள்ளியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு ரோட்டில் கொட்டியது. இதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு கூட்டம் கூடியது. இந்த நிலையில் வள்ளி மயங்கி சரிந்து விழுந்தார்.
இதை கண்டு கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிறகு பொதுமக்கள் வள்ளியை மீட்டு 108 ஆம்பு லன்சு மூலம் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் இன்று ஈரோடு வந்தார். அவர் பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களில் வரிசையில் காத்து கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்கள். இந்த அறிவிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான் அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.
இதன் நோக்கம் வரவேற்கத்தக்கது தான். ஆனால் சமைக்க தெரியாதவன் கையில் காய்கறி, பருப்பு கொடுப்பது போல் இந்த திட்டம் உள்ளது.
தமிழகத்தில் மழை இல்லாமல் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகி வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள கூடாது என கேட்டு கொள்கிறேன். இதை போக்க தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு, பழையப்பாளையம், செல்வம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது55). நில புரோக்கர். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி பார்த்து வந்த நில புரோக்கர் தொழில் நஷ்டம் அடைந்தது. இதனால் சில நாட்களாவே கிருஷ்ணமூர்த்தி வேதனையுடன் இருந்துள்ளார்.
அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் கிருஷ்ணமூர்த்தி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோபி:
இந்தியா முழுவதும் கடந்த 8-ந் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். செல்லாத நோட்டுகளை பாங்கிகளிலும், தபால் நிலையங்கிளிலும் மாற்றி கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் படையெடுக்க தொடங்கினர். கோபியிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை எடுத்தனர். இதனால் சில்லரை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் வழக்கம் போல் சத்தியமங்கலம் மெயின் ரோடு, புதுப்பாளையம் போலீஸ் நிலையம், கோபி அரசு ஆஸ்பத்திரி வீதி, மெடச்சூர் ரோடு போன்ற ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க சென்ற மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. ரூ.100 நோட்டுகள் வந்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அதிகாலையே நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ.100 நோட்டுகளை மலர்ந்த முகத்துடன் எடுத்து சென்றதை பார்க்க முடிந்தது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூர், இந்திராநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகள் ரம்யா (வயது14).
சுப்பிரமணியும், வெள்ளையம்மாளும் கூலி வேலை பார்த்து வருகிறார்கள். காலைலேயே வேலைக்கு செல்பவர்கள் மாலை வருவார்கள்.
ரம்யா 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வீட்டு வேலையை கவனித்து வந்தாள். சம்பவத்தன்று சுப்பிரமணியும், வெள்ளையம்மாளும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.
ரம்யா மட்டும் வீட்டில் தனியான இருந்தார். மாலையில் வேலையை முடித்து விட்டு வந்த ரம்யா பெற்றோர்கள் ரம்யா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ரம்யாவை உறவினர் வீடுகள் முழுவதும் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.இது குறித்து வெள்ளையம்மாள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகளை கண்டு பிடித்து தாறுமாறு புகார் செய்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு, முனிசிபல் காலனி, சத்யா வீதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது45). இவரது கணவர் ரமேஷ்.இறந்துவிட்டார். இவர்களது மகன் தற்போது பவானியில் வசித்து வருகிறார்.
வள்ளியம்மாள் துணி மடிக்கும் வேலை பார்த்து வருகிறார். வள்ளியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். வள்ளியம்மாள் தனது மகனை பார்க்க பவானிக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
அதே போன்று நேற்று முன்தினம் பவானிக்கு சென்றார். மகனை பார்த்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பதற்றமடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து திருப்பதை கண்டு திடுக்கிட்டார். பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ,15 ஆயிரம் மாயமாகி இருந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து யாரோ மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஈரோடு நகரின் மைய பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளையால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






