என் மலர்
செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பவானி சாகர் அருகே குடிக்காதே என்று மனைவி திட்டியதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
பவானி சாகர் அருகே உள்ள கொத்த மங்கலம் நெரிஞ்சிப்பேட்டை என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 35). தொழிலாளி.
இவரும் சீதா (27) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
மோகன்ராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதை அவரது மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அவரை கண்டித்த மனைவி சீதா தனது குழந்தைகளுடன் வீட்டுக்குள் சென்று படுத்து கொண்டார்.
அப்போது வீட்டின் முன் உள்ள பந்தலில் மோகன்ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பவானி சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






