என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாளவாடி அருகே விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
    X

    தாளவாடி அருகே விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

    தாளவாடி அருகே நடந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    தாளவாடி அடுத்த கரளவாடி அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 33).

    சம்பவத்தன்று பசுவண்ணாவும், அவரது அத்தை மகனும் வேலை விசயமாக மோட்டார்சைக்கிளில் பிசில் வாடிக்கு சென்றனர்.

    பிறகு அங்கிருந்து பசுவண்ணாவும், அத்தை மகனும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். பசுவண்ணா மோட்டார் சைக்கிளை ஓட்ட அவரது அத்தை மகன் உட்கார்ந்து கொண்டு வந்தார்.

    பிசில்வாடி-மெட்டல் வாடி ரோட்டில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி பசுவண்ணா சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத வகையில் மோதியது.

    இதில் பசுவண்ணாவிற்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் 108 ஆம்பு லன்சுக்கு தகவல் கொடுத்து தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பசுவண்ணாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்தில் அவரது அத்தை மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×