என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப தகராறில் நடுரோட்டில் கத்தியால் மனைவி கழுத்தை அறுத்த கணவன்
    X

    குடும்ப தகராறில் நடுரோட்டில் கத்தியால் மனைவி கழுத்தை அறுத்த கணவன்

    குடும்ப தகராறில் நடுரோட்டில் மனைவி கழுத்தை அறுத்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளி. கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றும் இரவு முழுவதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றியது. இதனால் மனைவி வள்ளி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரை துரத்தி கொண்டு கணவர் வந்தார். நடுரோட்டில் மனைவியை ஆவேசமாக பேசிய கண்ணன் நடுரோடு என்றும் பாராமல் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இதில் வள்ளியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு ரோட்டில் கொட்டியது. இதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு கூட்டம் கூடியது. இந்த நிலையில் வள்ளி மயங்கி சரிந்து விழுந்தார்.

    இதை கண்டு கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிறகு பொதுமக்கள் வள்ளியை மீட்டு 108 ஆம்பு லன்சு மூலம் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×