என் மலர்tooltip icon

    செய்திகள்

    முனிசிபல் காலனியில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    முனிசிபல் காலனியில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    முனிசிபல் காலனியில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, முனிசிபல் காலனி, சத்யா வீதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது45). இவரது கணவர் ரமேஷ்.இறந்துவிட்டார். இவர்களது மகன் தற்போது பவானியில் வசித்து வருகிறார்.

    வள்ளியம்மாள் துணி மடிக்கும் வேலை பார்த்து வருகிறார். வள்ளியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். வள்ளியம்மாள் தனது மகனை பார்க்க பவானிக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

    அதே போன்று நேற்று முன்தினம் பவானிக்கு சென்றார். மகனை பார்த்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பதற்றமடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து திருப்பதை கண்டு திடுக்கிட்டார். பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ,15 ஆயிரம் மாயமாகி இருந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து யாரோ மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு நகரின் மைய பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளையால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×