என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபியில் ஏ.டி.எம்.மையங்களில் 100 ரூபாய் நோட்டுக்கள் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி
    X

    கோபியில் ஏ.டி.எம்.மையங்களில் 100 ரூபாய் நோட்டுக்கள் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி

    கோபியில் இன்று ஏ.டி.எம்.மையங்களில் 100 ரூபாய் நோட்டுக்கள் வந்ததால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எடுத்து சென்றனர்

    கோபி:

    இந்தியா முழுவதும் கடந்த 8-ந் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். செல்லாத நோட்டுகளை பாங்கிகளிலும், தபால் நிலையங்கிளிலும் மாற்றி கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் படையெடுக்க தொடங்கினர். கோபியிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை எடுத்தனர். இதனால் சில்லரை மாற்ற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் வழக்கம் போல் சத்தியமங்கலம் மெயின் ரோடு, புதுப்பாளையம் போலீஸ் நிலையம், கோபி அரசு ஆஸ்பத்திரி வீதி, மெடச்சூர் ரோடு போன்ற ஏ.டி.எம்.மையங்களில் பணம் எடுக்க சென்ற மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. ரூ.100 நோட்டுகள் வந்தது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் அதிகாலையே நீண்ட வரிசையில் காத்திருந்து ரூ.100 நோட்டுகளை மலர்ந்த முகத்துடன் எடுத்து சென்றதை பார்க்க முடிந்தது.

    Next Story
    ×