என் மலர்
ஈரோடு
நாமக்கல்லை சேர்ந்தவர் சூரியப்பிரகாஷ் (வயது 21), சர்வேஸ்வரன் (22).
இவர்கள் 2 பேரும் நாமக்கல்லில் இருந்து ஒரு சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கோவை செல்வதற்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடி வழியாக வந்தனர்.
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் அடுத்த ஒத்தக்கடை பக்கம் வந்தபோது எதிரே வந்த ஒரு லாரி சரக்கு ஆட்டோ மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது.
இதில் சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர் சர்வேஸ்வரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மோதிய லாரியின் டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கொடுமுடி போலீசார் விரைந்து சென்றனர்.
பலியான 2 பேரின் உடலை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு, வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சர்வாண்(வயது35). இவரது மனைவி லட்சுமிதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு கடைக்கு செல்வதற்காக வில்லரசம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று எதிர்பாராத வகையில் சர்வாண் மீது மோதியது. இதில் தூக்கி வீசபட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சர்வாணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி சர்வாண் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள முட்புதரில் 7 பேர் வட்டமாக அமர்ந்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள், போலீசாரை பார்த்தும் அங்கிருந்து தப்பிஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 55), பெரியவலசு பாப்பாத்திக்காடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (45), வள்ளியம்மை வீதியை சேர்ந்த மாதேஸ்வரன் (60), நாராயணவலசு திருமால் நரை சேர்ந்த ராமன் (46), வீரப்பன்சத்திரம் லால்பகதூர் வீதியை சேர்ந்த ராஜசேகரன் (54), ஜான்சி நகரை சேர்ந்த ஆறுமுகம் (46), சி.என்.சி. கல்லூரி பகுதியை சேர்ந்த நல்லசாமி (63) என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த ஆலுத்துப்பாளையம், காந்தி வீதியை சேர்ந்தவர் கரிகாலன்(வயது42). தறிப்பட்டடறை தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சம்பவத்தன்று கரிகாலன் வேலையை முடித்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். நஞ்சைஊத்துக்குளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று எதிர்பாராத வகையில் கரிகாலன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசபட்ட கரிகாலன் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேல்சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கரிகாலனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு கருகல்பாளையத்தைச் சேர்ந்தவர் சித்திக். இவரது மகன் அப்பாஸ் மந்திரி. (வயது25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை அவர்கள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க அப்பாஸ் மந்திரி வந்தார். அவர் கிண்டியை அடுத்த மடுவன்கரை சக்கரபாணி தெருவில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் தங்கினார்.
நேற்று இரவு அப்பாஸ் மந்திரி நண்பர்களுக்கு மது விருந்து வைத்தார். அப்போது அவரும் மது குடித்து இருக்கிறார். போதையில் அனைவரும் தூங்கி விட்டனர்.
இன்று காலை அப்பாஸ் மந்திரி ஈரோடு செல்ல இருந்தார். ஆனால் அவர் படுக்கையில் இருந்து எழவில்லை.
சந்தேகம் அடைந்த நண்பர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அப்பாஸ் மந்திரி ஏற்கனவே மாரடைப்பில் இறந்து இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பாஸ் மந்திரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சென்னைக்கு வந்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயித்த மாப்பிள்ளை இறந்ததால் மணமகள் வீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
புதுமாப்பிள்ளை அப்பாஸ் மந்திரி நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூரை அடுத்த உள்ள வெங்கடாபுரம் புல்லட்நாயக்கன் பாளையம் செம்மடையாம் தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாமூண்டீஸ்வா (வயது 38). இவர்களுக்கு திருணமாகி 10 வருடம் ஆகிறது.
பழனிச்சாமியின் தாயார் லட்சுமி (70). இவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ஒன்றாக வசித்து விவசாயம் செய்து வந்தனர்.
லட்சுமிக்கும் சாமூண்டீஸ்வாக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் லட்சுமி அருகிலேயே தனியாக வசித்து வந்தார்.
லட்சுமியை பார்க்க அவரது மகள் ராஜாத்தி அடிக்கடி வந்து செல்வார் இது மருமகள் சாமூண்டீஸ்வரிக்கு பிடிக்கவில்லை.
இதனால் மாமியார் லட்சுமியை விஷம் வைத்து கொல்ல சாமூண்டீஸ்வரி திட்டமிட்டார். இதற்காக மரத்தில் தெளிவு இறக்கும் ஒருவாடம் தெளிவு வாங்கி அதில் விஷம் கலந்து மாமியார் லட்சுமியை கொல்ல முயன்றார். இதற்கு தெளிவு இறக்கும் தொழிலாளி ஒத்துழைக்காததால் சாமூண்டீஸ்வரி தனது திட்டத்தை கைவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 26.11.2015-ம் ஆண்டு தனது தாயாரை பார்ப்பதற்காக ராஜாத்தி வந்தார். சம்பவத்தன்று லட்சுமி, பழனிச்சாமி, சாமுண்டீஸ்வா ஆகிய 3 பேரும் வீட்டில் பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த சாமூண்டீஸ்வரி ராஜாத்தியிடம் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவர் எனது தாயார் உயிருடன் இருக்கும் வரை அவரை பார்ப்பதற்காக நான் வருவேன் என்று கூறினார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சாமூண்டீஸ்வா உனது அம்மா உயிருடன் இருந்தால் தானே நீ வருவாய். அவரை கொன்று விடுகிறேன் என்று கூறி லட்சுமியை கையால் தாக்கினார்.
இதில் கீழே விழுந்த லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமூண்டீஸ்வரியை கைது செய்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட சாமூண்டீஸ்வரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.4 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது65). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் 3 ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு இன்று 2 குட்டிகளை ஈன்றெடுத்தது.
இதில் ஒரு ஆட்டுக்குட்டி மிகவும் அதிசயமாக இருந்தது. அந்த ஆட்டுக்குட்டிக்கு 3 முகம் இருந்தது. மேலும் 4 கண்கள் இருந்தது. தலையின் நடுப்பகுதியில் 2 கண்களும், பக்கவாட்டில் 2 கண்களும் இருந்தது.
அப்பகுதி முழுவதும் இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பற்றிய செய்தி பறந்தது. பொதுமக்கள் சுப்பிரமணி வீட்டிக்கு வந்து அந்த 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தப்படி சென்றனர்.
கோபி:
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிடங்களில் மாற்றுவதற்கான காலக்கெடு கடந்த 15-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
இந்த நோட்டுகளை வருகிற 31-ந் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒருவரது கணக்கில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வாத்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக பலர் கமிஷனுக்கு தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய்நோட்டுகளை மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே கோபி டி.எஸ்.பி செல்வம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மேற்பார்வையில் சப் இன்ஸ் பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
கோபி மொடச்சூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக 2 கார்கள் வேகமாக வந்தது.
இந்த கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கட்டு கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தொயவந்தது. இதையொட்டி 2 கார்களிலும் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த கும்பல் கமிஷனுக்கு பழைய நோட்டுகளை பெற்று கொண்டு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பதற்கு வந்தது என தெரியவந்தது.
இதையொட்டி கோவை ஆலாந்துறையை சேர்ந்த சக்திவேல் (வயது37), பொள்ளாச்சியை சேர்ந்த மனோஜ் (36), சுரேஷ் (27), செந்தில்குமார், சபா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கமிஷனுக்கு பழைய நோட்டுகளை பெற்று கொண்டு புதிய 2 ஆயிரம் ரூபாய்கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஏற்கனவே பல தடவை கோபி பகுதியில் கமிஷனுக்கு புதிய ரூபாய் நோட்டுளை மாற்றி கொடுத்து வந்ததும், புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வங்கியில் மொத்தமாக பெற்றதும் தெரியவந்தது.
கைது செய்யயப்பட்ட 5 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.36 லட்சத்து 90 ஆயிரம் இன்று வருமான வாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகள் கேட்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தலைமையில் வரும் 21-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. தனி நபர் மனுக்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கை மனுக்கள் முற்பகலில் பெற்றுக் கொள்ளப்படும்.
எனவே மின் வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சங்கர மூர்த்தி. இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவகாமி.இவர்களது மகன் ரஞ்சித் குமார். இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
ரஞ்சித் குமார் நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டார். இதனால் சங்கர மூர்தியும் அவரது மனைவி சிவகாமியும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். முன் அறையில் சங்கர மூர்த்தியுடன் அவருடன் வேலை பார்க்கும் லாரி டிரைவா ரமேஷ் என்பவர் படுத்து இருந்தார்.
அப்போது நள்ளிரவில் 1 மணி அளவில் வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்டது. இதனால் திடுக்கிட்டு விழித்த சிவகாமி இருட்டில் 2 பேர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார்.
இதனால் கொள்ளையர்கள் சிவகாமியை தாக்கி கீழே தள்ளினர். இதன் பிறகு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் எடையுள்ள 2 தங்க செயின்களை பறித்தனர்.
முன்னதாக அவர்கள் பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் திருடி கொண்டு ஓடினர். இவர்களை சங்கரமூர்த்தி, லாரி டிரைவர் ரமேஷ் மற்றும் சிவகாமி ஆகியோர் விரட்டி சென்றனர்.
அப்போது 2 பேரில் ஒருவன் வீட்டுக்கு வெளியே நின்ற சங்கர மூர்த்தியின் மோட்டார் சைக்கிளை ஓட்டி கொண்டு சென்றான். இன்னொரு ஆசாமி மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வேகமாக ஓடி னான்.
அப்போது மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இதனால் மோட் டார் சைக்கிளில் சென்ற ஆசாமி அங்கேயே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பினான். அதன் பின்னால் ஓடிய ஆசாமியும் தப்பி சென்றுவிட்டான்.
இது பற்றி மொடக்குறிச்சி போலீசார் வழக்ப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் மொடக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மவுளிசரண் (வயது 26). எம்.காம். பட்டதாரி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.
இவர் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டார். பிறகு அவர் தனது நண்பர்களிடம் தான் விஷம் குடித்து விட்டதாக செல் போனில் தகவல் கொடுத்தார்.
நண்பர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு உடனடியாக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மவுளிசரண் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இவர் எதற்காக விஷம் குடித்தார் என உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு சிவசங்கரி, சத்தியா உள்பட 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் பெற்றோர் இறந்து விட்டனர்.
சிவசங்கரிக்கு திருமணம் முடிந்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலாங்காட்டுவலசு, காட்டுபாளையம் லோகியா வீதியை சேர்ந்த கணவர் ஜெகதீசனுடன் வசித்து வருகிறார்.
இவர்களுடன் சிவசங்கரியின் தங்கைகளும் வசித்து வந்தனர். இதில் சத்தியா (வயது15) கணபதிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
சத்தியாவிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதற்காக பல்வேறு இடங்களிலும் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த சத்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியாவை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சத்தியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






