என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்லாத நோட்டுகளை கமி‌ஷனுக்கு மாற்றி கொடுக்கும் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது
    X

    செல்லாத நோட்டுகளை கமி‌ஷனுக்கு மாற்றி கொடுக்கும் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது

    கோபி மொடச்சூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செல்லாத நோட்டுகளை கமி‌ஷனுக்கு மாற்றி கொடுக்கும் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

    கோபி:

    செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிடங்களில் மாற்றுவதற்கான காலக்கெடு கடந்த 15-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.

    இந்த நோட்டுகளை வருகிற 31-ந் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒருவரது கணக்கில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வாத்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக பலர் கமி‌ஷனுக்கு தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய்நோட்டுகளை மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதற்கிடையே கோபி டி.எஸ்.பி செல்வம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மேற்பார்வையில் சப் இன்ஸ் பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    கோபி மொடச்சூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக 2 கார்கள் வேகமாக வந்தது.

    இந்த கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கட்டு கட்டாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தொயவந்தது. இதையொட்டி 2 கார்களிலும் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அந்த கும்பல் கமி‌ஷனுக்கு பழைய நோட்டுகளை பெற்று கொண்டு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பதற்கு வந்தது என தெரியவந்தது.

    இதையொட்டி கோவை ஆலாந்துறையை சேர்ந்த சக்திவேல் (வயது37), பொள்ளாச்சியை சேர்ந்த மனோஜ் (36), சுரேஷ் (27), செந்தில்குமார், சபா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கமி‌ஷனுக்கு பழைய நோட்டுகளை பெற்று கொண்டு புதிய 2 ஆயிரம் ரூபாய்கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஏற்கனவே பல தடவை கோபி பகுதியில் கமி‌ஷனுக்கு புதிய ரூபாய் நோட்டுளை மாற்றி கொடுத்து வந்ததும், புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வங்கியில் மொத்தமாக பெற்றதும் தெரியவந்தது.

    கைது செய்யயப்பட்ட 5 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.36 லட்சத்து 90 ஆயிரம் இன்று வருமான வாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×