என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபியில் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    கோபியில் பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    கோபியில் திருமணம் ஆகாத பட்டதாரி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் மவுளிசரண் (வயது 26). எம்.காம். பட்டதாரி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இவர் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து விட்டார். பிறகு அவர் தனது நண்பர்களிடம் தான் வி‌ஷம் குடித்து விட்டதாக செல் போனில் தகவல் கொடுத்தார்.

    நண்பர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு உடனடியாக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மவுளிசரண் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இவர் எதற்காக வி‌ஷம் குடித்தார் என உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×