என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமியாரை கொன்ற மருமகளுக்கு 5 வருடம் ஜெயில் தண்டனை
    X

    மாமியாரை கொன்ற மருமகளுக்கு 5 வருடம் ஜெயில் தண்டனை

    மாமியாரை கொன்ற மருமகளுக்கு 5 வருடம் ஜெயில் தண்டனை அளித்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் இன்று தீர்ப்பளித்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூரை அடுத்த உள்ள வெங்கடாபுரம் புல்லட்நாயக்கன் பாளையம் செம்மடையாம் தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சாமூண்டீஸ்வா (வயது 38). இவர்களுக்கு திருணமாகி 10 வருடம் ஆகிறது.

    பழனிச்சாமியின் தாயார் லட்சுமி (70). இவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் ஒன்றாக வசித்து விவசாயம் செய்து வந்தனர்.

    லட்சுமிக்கும் சாமூண்டீஸ்வாக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் லட்சுமி அருகிலேயே தனியாக வசித்து வந்தார்.

    லட்சுமியை பார்க்க அவரது மகள் ராஜாத்தி அடிக்கடி வந்து செல்வார் இது மருமகள் சாமூண்டீஸ்வரிக்கு பிடிக்கவில்லை.

    இதனால் மாமியார் லட்சுமியை வி‌ஷம் வைத்து கொல்ல சாமூண்டீஸ்வரி திட்டமிட்டார். இதற்காக மரத்தில் தெளிவு இறக்கும் ஒருவாடம் தெளிவு வாங்கி அதில் வி‌ஷம் கலந்து மாமியார் லட்சுமியை கொல்ல முயன்றார். இதற்கு தெளிவு இறக்கும் தொழிலாளி ஒத்துழைக்காததால் சாமூண்டீஸ்வரி தனது திட்டத்தை கைவிட்டார்.

    இந்த நிலையில் கடந்த 26.11.2015-ம் ஆண்டு தனது தாயாரை பார்ப்பதற்காக ராஜாத்தி வந்தார். சம்பவத்தன்று லட்சுமி, பழனிச்சாமி, சாமுண்டீஸ்வா ஆகிய 3 பேரும் வீட்டில் பேசி கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த சாமூண்டீஸ்வரி ராஜாத்தியிடம் ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவர் எனது தாயார் உயிருடன் இருக்கும் வரை அவரை பார்ப்பதற்காக நான் வருவேன் என்று கூறினார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சாமூண்டீஸ்வா உனது அம்மா உயிருடன் இருந்தால் தானே நீ வருவாய். அவரை கொன்று விடுகிறேன் என்று கூறி லட்சுமியை கையால் தாக்கினார்.

    இதில் கீழே விழுந்த லட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமூண்டீஸ்வரியை கைது செய்து ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட சாமூண்டீஸ்வரிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.4 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார்.

    Next Story
    ×