என் மலர்

  செய்திகள்

  மொடக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் மோதி தறிப்பட்டறை தொழிலாளி பலி
  X

  மொடக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் மோதி தறிப்பட்டறை தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மொடக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் மோதி தறிப்பட்டறை தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மொடக்குறிச்சி:

  மொடக்குறிச்சி அடுத்த ஆலுத்துப்பாளையம், காந்தி வீதியை சேர்ந்தவர் கரிகாலன்(வயது42). தறிப்பட்டடறை தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

  சம்பவத்தன்று கரிகாலன் வேலையை முடித்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். நஞ்சைஊத்துக்குளியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று எதிர்பாராத வகையில் கரிகாலன் மீது மோதியது.

  இதில் தூக்கி வீசபட்ட கரிகாலன் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

  மேல்சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கரிகாலனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

  இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×