என் மலர்
ஈரோடு
அதேபோல் இந்தாண்டும் நாளைமறுநாள் (2-ந்தேதி) காலை 8.30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தைப்பூச விழா தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையும் 6 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு வெள்ளித்தேரில் சாமி திருவீதி உலா வருகிறது.
இதேபோல் தினமும் காலை, மாலை சிறப்புபூஜை களும் வழிபாடுகளும் நடக்கிறது. வரும் 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5 மணி முதல் 7.30 மணி வரை திருக்கல்யாணமும் மாலை 3 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். மறுநாள் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 7.30 மணிக்கு சுவாமி திரு வீதிஉலா, பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்திய நாட்டு பொருளாதாரத்தில் ஒரு நிச்சய மந்த நிலை நீடிக்கிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பணம் ஒழியாது என்று பொருளாதார துறை ஆலோசகர் சாமிநாதன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்பட பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டாக மழை முற்றிலும் பொய்த்து விட்டது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய குழு வறட்சி பகுதிகளை பெயருக்கு பார்வையிட்டதை போல் உள்ளது. உடனடியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
சென்னை மெரினா கடற்கரையில் 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடந்துள்ளது. 6-வது நாள் ஏற்பட்ட கலவரம் மிகவும் வருந்ததக்கது. இந்த கலவரம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
பேட்டியின் போது மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், மாநில பொறுப்பாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம், சின்னட்டிபாளையம், ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
தங்கராஜிக்கு வயிற்றுவலி இந்ததாக கூறப்படுகிறது. இதற்ஙகாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். எனினும் வயிற்றுவலி குணமாக வில்லை என கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்கராஜ் தற்கொலை செய்ய முடிவெடித்து சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுவில் விஷத்தை கலந்து குடித்து மயங்கினார்.
தங்கராஜை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த ஈங்கூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அரசமரமும் வேப்ப மரமும் ஒரே இடத்தில் ஒன்றாக வளர்ந்து உள்ளது. இந்த நிலையில் வேப்ப மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மூன்று அடி உயரத்தில் பால் வடிந்தது. இதை பார்த்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.
இதை தொடர்ந்து வேப்ப மரத்திற்கு சேலை அணிவித்து மஞ்சள் நீர் ஊற்றி மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர். இதுகுறித்து தகவல் பரவியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் வந்து வேப்ப மரத்தினை வழிபட்டு செல்கின்றனர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் மேற்குவீதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது23). இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
புவனேஸ்வரிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறபடுகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் புவனேஸ்வரி வேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் சிவராமன் ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை புவனேஸ்வரி குடித்தார். இதனால் மயக்கம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோயம்முத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி சுல்தான் பேட்டையைச் சேர்ந்தவர் பாத்திமாபீவி. இவரது மகள் ஹஜினாபேகம் (வயது 23).
கடந்த 4 ஆண்டுக்கு முன் ஹஜினாபேகத்துக்கும், நாமக்கல்லை சேர்ந்த நிஜாமுதீன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஹஜினாபேகத்துக்கும் ஒரு வாலிபருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலில், கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்கு முன் மனைவி ஹஜினாபேகத்தை நிஜாமூதின் அழைத்து கொண்டு கொடுமுடியில் உள்ள ஹஜினாபேகம் வீட்டில் கொண்டு விட்டார். பிறகு 4 நாட்களுக்கு முன் மனைவியை குடும்பம் நடத்த வரும்படி கணவர் நிஜாமுதீன் அழைத்தார்.
ஆனால் அவருடன் செல்ல மனைவி மறுத்து விட்டார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்குள் சென்ற ஹஜினா பேகம் வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.
டி.என்.பாளையம்:
பங்களாபுதூர் அருகே உள்ள ஏழுர் மேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன், இவரது மனைவிஜெசிந்தா விண்ணரசி (வயது 28).
இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு மகா தர்ஷினி (8), வித்யா ஸ்ரீ (6) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
சரவணன் சத்தியமங்கலத்தில் இரு சக்கரம் வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இதில் போதிய வருமானம் இல்லாததால் குடும்ப செலவுக்கு சிரமப்பட்டு வந்தனர்.
எனவே வறுமை காரணமாக குழந்தைகளை சாயாக கவனிக்க முடிய வில்லையே என்று ஜெசிந்தா விண்ணரசி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இதனால் வாழ்க்கையில் மனம் உடைந்த அவர் தண்ணீரில் சாணிப் பவுடரை (விஷம்) கலந்து குடித்து விட்டார். மயக்கமான அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கட்சிக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட வேண்டியவர் முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னே சென்ற தனது காரை நிறுத்தி பின்னால் வந்த முதல் அமைச்சர் காருக்கு வழி விட்டு மரியாதை செலுத்தி உள்ளார்.
அதே போல் முதல்வர் பன்னீர்செல்வம், ‘‘எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கார் செல்கிறது. கவனமாக செல்லுங்கள். அவர் முன்னே போகட்டும்’’ என்கிறார்.
இந்த அரசியல் நாகரீகம் பாராட்டுக்குரியது. கட்சிக்கு அப்பாற்பட்டு முதல்வர் பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை மதிப்பது இல்லை. அவமானப்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்திருந்தார். இதை அவரை அவமானப்படுத்தும் செயல் ஆகும். முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் பதவி ஏற்றதிலிருந்து மிக சிறப்பாக பணி புரிந்து வருகிறார். ஆனால் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வரும் போது ஏற்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் உணர்வோடு மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் போராட்டம் நடத்தியது பாராட்டக்குரியது. ஆனால் போராட்டம் நடத்தியவர்களை கலைப்பதற்காக போலீசார் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த போராட்டத்தின் போது தேச விரோத சக்திகள் புகுந்து விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த அறிக்கையை 2 மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் ஆந்திரா சென்று அந்த மாநில முதல்- அமைச்சரை சந்தித்த பேசி தண்ணீரை பெற்று தந்தது போல இப்போது அவர் கேரள முதல் மந்திரியை சந்தித்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிர் காலம் இல்லை என பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் குஜராத் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளது. இந்த வெற்றியை வெளி வர விடாமல் மோடி தடுத்து விட்டார்.
குஜராத்தை போல பஞ்சாப், கோவா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெறும். எனவே பாரதீய ஜனதா காணாமல் போய் விடும்.
பீட்டா அமைப்புக்கு மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான் ஆதரவு அளித்தது என்பது தவறானது. தமிழக கலாச்சார விளையாட்டான ஜல்லிக் கட்டு நடத்த எதிர்ப்பு வரும் என்று அப்போது காங்கிரஸ் நினைக்க வில்லை. நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவாகவே உள்ளோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலும் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.
மதம் மற்றும் சாதியினர் பெயரால் பாரதிய ஜனதா கட்சி ஓட்டுகளை பெற முயற்சிக்கிறது. எனவே பாரதி ஜனதா கட்சியை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, சரவணன், காந்தி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறு பான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் விஜய்கண்ணா மற்றும் பாட்ஷா உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஈரோடு:
பவானிசாகர், அக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன்(வயது33). பகுத்தம் பாளையத்தில் உள்ள ஒரு பேப்பர் மில்லில் வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று மகுடேஸ்வரன் வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் சாலை விபத்தில் சிக்கினார்.
இதற்காக இரண்டு மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் மகுடேஸ்வரனுக்கு திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகுடேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள குள்ளம் பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 64).
இவர் தர்மபுரியில் உள்ள அரசு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
உடல் நலம் இல்லாமல் இருந்த அவர் பல இடங்களில் வைத்தியம் பார்த்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லையாம்.
இதனால் கிருஷ்ணசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதன் காரணமாக அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே கோபி அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு,சோலார் பகுதியில் சமீப காலமாக விவசாய தோட்டத்தில் உள்ள மோட்டார் பம்புகள் மர்மமான முறையில் திருடப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் இருந்த மோட்டாரை ஒரு வாலிபர் திருடி கொண்டிருந்தார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் பவானி, காமராஜ் வீதியை சேர்ந்த தனபால் (24) என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஈரோடு:
கடந்த நவம்பர் மாதம், 8-ந்தேதி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களிடம் இருந்து பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும் புதிய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கும் படாதபாடு பட்டார்கள். இப்போதுதான் ஒரளவு நிலைமை சீரடைந்து உள்ளது.
இந்த நிலையில் இப்போது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி கிளம்பி உள்ளது.
இதனால் பஸ்கள், மற்றும் வியாபாரிகள் யாரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர். இது பற்றி ரிசர்வ் வங்கி பழைய 10 ரூபாய் நாணயங்கள்செல்லும் என்று அறிவித்தது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரும் 10 ரூபாய்நாணயம் செல்லும் . எனவே வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். 10 ரூபாயை யாராவது வாங்க மறுத்தால் அது பற்றி புகார் செய்யலாம் என்று கூறினார்.
புகார் செய்வதற்கான கலெக்டர் அலுவலக போன் எண், வாட்ஸ்அப் எண் போன்றவற்றையும் அவர் வெளியிட்டார்.
ஆனாலும் வியாபாரிகள் மற்றும் ஒரு சில பஸ்களில் இப்போதும் கூட தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.
இதை தொடர்ந்து போக..போக.. 10 ரூபாய் காசுகள் செல்லாமல் போய் விடுமோ என்று பயந்த பொதுமக்கள் தாங்கள் உண்டியல்களில் சேமித்து வைத்திருந்த காசுகளை இப்போது வெளியில் மாற்றி வருகிறார்கள்.
இதனால் இப்போது ஏராளமான 10 ரூபாய் காசுகள் புழக்கததில் வந்து உள்ளன.
இந்த காசுகளை டீக்கடைகள் மளிகை கடைகளில் வாங்க மறுக்கிறார்கள். டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட இந்த காசுகளை வாங்க மறுப்பதாக குடிமகன்கள் கூறுகிறார்கள்.
ஒரு சில பஸ்களில் கண்டக்டர்கள் எல்லோருமே 10 ரூபாய் காசுகளை கொடுத்தால் நாங்கள் எப்படி மாற்றுவது என்று புலம்பிய படி வாங்கி கொள்கிறார்கள்.
வேறு சில கண்டக்டர்களோ இந்த 10 ரூபாய் காசுகளை வாங்க மறுக்கிறார்கள்.
இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகிறார்கள்.
ஒரு சில கடைகளில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறி உள்ளாரே.. என பொதுமக்கள் கேட்டால் அந்த கடைகாரர்கள் ‘‘கலெக்டர் என்ன மோடியே வந்து 10 ரூபாய் கொடுத்தாலும் வாங்க மாட்டோம்’’ என்று அதிரடியாக கூறியதாக மக்கள் வேதனையுடன் கூறினர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.






