என் மலர்

    செய்திகள்

    பவானிசாகர் அருகே விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற வாலிபர் பலி
    X

    பவானிசாகர் அருகே விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற வாலிபர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பவானிசாகர் அருகே விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானிசாகர், அக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன்(வயது33). பகுத்தம் பாளையத்தில் உள்ள ஒரு பேப்பர் மில்லில் வேலை பார்த்தார்.

    சம்பவத்தன்று மகுடேஸ்வரன் வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் சாலை விபத்தில் சிக்கினார்.

    இதற்காக இரண்டு மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் மகுடேஸ்வரனுக்கு திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையெடுத்து சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகுடேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×