என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடியில் கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தற்கொலை
    X

    கொடுமுடியில் கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தற்கொலை

    கொடுமுடியில் கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொடுமுடி:

    கொடுமுடி சுல்தான் பேட்டையைச் சேர்ந்தவர் பாத்திமாபீவி. இவரது மகள் ஹஜினாபேகம் (வயது 23).

    கடந்த 4 ஆண்டுக்கு முன் ஹஜினாபேகத்துக்கும், நாமக்கல்லை சேர்ந்த நிஜாமுதீன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஹஜினாபேகத்துக்கும் ஒரு வாலிபருக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலில், கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்கு முன் மனைவி ஹஜினாபேகத்தை நிஜாமூதின் அழைத்து கொண்டு கொடுமுடியில் உள்ள ஹஜினாபேகம் வீட்டில் கொண்டு விட்டார். பிறகு 4 நாட்களுக்கு முன் மனைவியை குடும்பம் நடத்த வரும்படி கணவர் நிஜாமுதீன் அழைத்தார்.

    ஆனால் அவருடன் செல்ல மனைவி மறுத்து விட்டார். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்குள் சென்ற ஹஜினா பேகம் வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.

    Next Story
    ×