என் மலர்
ஈரோடு
எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில், எண்ணெய்க் கப்பலில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதன் காரணமாக, எண்ணூர் தொடங்கி திருவான்மியூர் வரை கிழக்கு கடற்கரைபகுதியில் எண்ணெய் படலம் பரவி பெருமளவில் மாசு ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை உள்ளதால், இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எண்ணூர் துறைமுகத்தில் பரவியுள்ள 60 டன் எண்ணெய் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்ள்ளதாகவும், எஞ்சிய 20 டன் கழிவுகளை அகற்றும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் என்றும் அமைச்சர் கருப்பண்ணன் கூறினார்.
இதற்கிடையே, கப்பல்கள் மோதல் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். மேலும், கடலில் பரவியுள்ள எண்ணெய் கழிவினை அகற்றும் பணியில் உதவி செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கட்காரி நன்றி தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் பாடெர்க் மாவட்டம் சபரங் கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரஜனா. இவரது மகன் லிப்பன்ஜனா (வயது20). இவர் கடந்த 1½ ஆண்களாக ஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த வேப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் லிப்பன் ஜனா அவரது தாய்க்கு போன் செய்து ஊருக்கு வருவதாக சொன்னதாகவும், அதற்கு அவரது தாய் இப்போது ஊருக்கு வர வேண்டாம். அக்காவின் திருமணத்திற்கு வந்தால் போதும் என்று கூறியுள்ளார்.
இதனால் லிப்பன்ஜனா மனவேதனையில் இருந்து உள்ளார். சம்பவத்தன்று அவர் வேலை முடிந்து அறையில் இருந்தார். பின்னர் அவரது நண்பர் அலேக்தாஸ் என்பவர் பணியை முடித்து வந்த போது லிப்பன்ஜனா தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அலேக்தாஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து லிப்பன் ஜனாவை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். லிப்பன்ஜனாவை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த தகவலை லிப்பன்ஜினா பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு, சாஸ்திரி நகர், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 55). இவரது மனைவி ரங்கநாயகி.
மாதேஸ்வரன் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரங்கநாயகியும் கணவருடன் சேர்ந்து கட்டிட வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாரதி நகர், மாருதி கார்டன், 3-வது வீதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மாதேஸ்வரனும், ரங்கநாயகியும் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று வழக்கம் போல் வீட்டின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். டீ குடிப்பதற்காக மொட்டை மாடியில் இருந்து மதேஸ்வரன், அவரது மனைவி ரங்கநாயகியும் உடன் வேலை பார்பவர்களும் கீழே இறங்கி வந்தனர்.
அப்போது வந்து கொண்டிருந்த மதேஸ்வரன் எதிர்பாராத வகையில் திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அவரது மனைவி ரங்கநாயகி இதை பார்த்து கதறி அழுதார்.
அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மதேஸ்வரனை கொண்டு சென்றனர். மதேஸ்வரனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மனைவி கண் முன்னே கணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரச்சலூர்:
அரச்சலூர் அருகே உள்ள கரட்டாங்கரடு என்ற இடத்தை சேர்ந்தவர் மோகன சுந்தரம் .இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 21). இவர் வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ரஞ்சித் குமாரின் பாட்டி உடல் நலம் இல்லாமல் இருந்தார். இதனால் அவர் திடீர் என்று இறந்து விட்டார்.
பாட்டியின் மேல் அதிக பாசம் வைத்திருந்த ரஞ்சித்குமார் பாட்டி இறந்ததில் இருந்து சோகமாக காணப்பட்டார்.
இந்த நிலையில் அவர் அதிக துக்கம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனால் சம்பவத்தன்று அவர் தனது வீட்டின் உள்ளே சென்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனால் உடல் கருகிய நிலையில் ரஞ்சித் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதி தொண்டூர் வனக்கிராமத்தில் நேற்று முன் தினம் சுமார் 4 வயது மதிக்கத்தக்க கரடி குட்டி புகுந்தது.
அப்பகுதியில் உள்ள குட்டை அருகே படுத்துக்கொண்ட அந்த கரடி காட்டுக்குள் போக மறுத்தது.
பொதுமக்கள் பல்வேறு வகைகளில் காட்டுக்குள் விரட்ட எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது.
இதையொட்டி வனக் கிராம மக்கள் சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வனத்துறையினரும் அந்த கரடி குட்டியை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த கரடியோ காட்டுக்குள் போக அடம் பிடித்தது. மேலும் அந்த கரடி உடல் நலம் குன்றி போயும் இருந்தது.
இதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முதலில் முடிவு செய்த வனத்துறையினர் பிறகு உடல்நலம் குன்றி இருந்த கரடி குட்டியை வேறு வகையில் பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி ஒரு பெரிய தார்பாய் மூலம் வனத்துறையினர் கரடிகுட்டி மீது பாய்ந்து தார்பாயை அதன் மீது போட்டு அமுக்கி பிடித்தனர். பிறகு கால்களை கயிறு மூலம் கட்டினர்.
தொடர்ந்து ஒரு மூங்கில் மரத்தில் தொட்டில் அமைத்து அதில் அந்த கரடி குட்டியை கட்டி வனத்துறையினர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றனர்.
மல்லியம்மன் வர்க்கம் வனப்பகுதியில் இறக்கி கால்களின் கட்டை அவிழ்த்து அந்த காட்டுக்குள் கரடியை விட்டு விட்டு வந்து விட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழுமத்தின் மூலம் ஆண், பெண் இரண்டாம் நிலை காவலர், ஆண், பெண் இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் ஆண் தீயணைப்போர் என 15 ஆயிரத்து 664 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பபடுகிறன்றன.
இதற்கு 10-ம் வகுப்பு கல்வி தகுதி இருப்பது அவசியம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல்(பிப்.1-ந்தேதி) அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும், 24 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 2 ஆண்டுகளும், ஆதி திராவிடர், ஆதிதிரா விடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியின வகுப்பினர் மற்றும் அனைத்து வகுப்புனை சார்ந்த ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு 5 ஆண்டுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கு 21 ஆண்டுகளும்(45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்) உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆண்கள் குறைந்த பட்சம் 170 செ.மீ.உயரம், பெண்கள் 159 செ.மீ.உயரம் இருக்க வேண்டும். இந்த உடற்கூறு அளவில் உரிய பிரிவினருக்கு தளர்வும் உண்டு.
இதற்கான விண்ணப் பங்கள் மாவட்டத்திலுள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களில் கிடைக்கும். தபால் நிலையங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையினை தேர்வு குழுமத்தின் www.tnusrb.tn.gov. என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வரும் 22-ந் தேதி(புதன்கிழமை) கடைசி தேதி ஆகும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இரண்டாம் நிலை காவலர் சிறை காவலர், தீயணைப் போர் தேர்விற்கு தயார் செய்ய உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி உடல் திறன் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. மேற்கண்ட தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னிமலையை அடுத்த வடமுகம் வெள்ளோட்டில் உள்ள ஜல்லிமேடு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் அம்மாசை. இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகள் சந்திரா (வயது 23).
சந்திராவுக்கும் ஆதாம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்திலேயே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் சந்திரா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
தாய் முத்துலட்சுமிக்கும் மகள் சந்திராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. அப்போது கணவனுடன் வாழாமல் இங்கு வந்து எங்களுடனும் தகராறு செய்கிறாயே என்று முத்துலட்சுமி தனது மகளை கண்டித்து வந்தார்.
சம்பவத்தன்றும் தாய்- மகள் இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சந்திரா தாயிடம் கோபித்து கொண்டு அருகில் வசிக்கும் தனது பாட்டி பொன்னழகியின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது பொன்னழகியும் பேத்தி சந்திராவை கண்டித்தார். கணவனுடன் வாழாமல் இங்கு வந்து ஏன் எல்லோரிடமும் சண்டை போடுகிறாய்? என்று கேட்டார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரா தனது பாட்டியின் தலையை பிடித்து அங்கிருந்த கல்லில் மோதினார் . இதனால் பொன்னழகியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அப்போதும் ஆத்திரம் அடங்காத சந்திரா அருகில் கிடந்த அரிவாளால் பொன்னழகியை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பொன்னழகி பாதாபமாக இறந்தார். இதனால் பயந்து போன சந்திரா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து நான் பாட்டியை கொலை செய்து விட்டேன். இதை யாரும் வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினாராம்.
இந்த நிலையில் பொன்னழகி கொலை செய்யப்பட்ட போது சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் வந்து பார்த்தார். அப்போது பொன்னழகி ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும் அவர் கொலை செய்யப்பட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி வெள்ளோடு கிராம நிர்வாக அதிகாரி சுரேந்திர குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் நாய் வீரா வந்தது. இந்த நாய் கொலை செய்யப்பட்டு கிடந்த பொன்னழகியின் உடலை மோப்பம் பிடித்து ஓடியது. அருகில் உள்ள சந்திராவின் பெற்றோர் வீட்டுக்குள் நாய் ஓடியது.
இந்த நேரத்தில் பாட்டி பொன்னழகியை கொலை செய்த போது சந்திராவின் உடையில் ரத்தம் கொட்டியது. இந்த துணிகளை அவர் மாற்றி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த துப்பறியும் நாய் வீரா ரத்தக்கறை படிந்த சந்திராவின் துணியையும் அருகில் இருந்த சந்திராவையும் கவ்வி பிடித்தது.
இதை தொடர்ந்து சந்திராவை கைது செய்த போலீசார் அவரிம் விசாரித்த போது அவர் பாட்டி பொன்னழகியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
கைது செய்யப்பட்ட சந்திரா பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலையாளியை போலீஸ் துப்பறியும் நாய் கவ்வி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளோடு வாரச்சந்தை வாரம் தோறும் சனிக்கிழமை வெள்ளோடு அரசு ஆஸ்பத்திரி அருகே கூடுகிறது.
இந்த சந்தையில் அனைத்து பொருட்களும் விற்பனை நடைபெறும் இந்த பகுதியில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இவர்களிடம் சுங்கம் வசூல் செய்யும் உரிமம் ஆண்டு தோறும் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஏலம் விடப்படும் வரும் 2017 2018-ம் நிதி ஆண்டுக்கான ஏலம் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது ஏலத்தினை பி.டி.ஓ., வாணி நடத்தினார் இதில் ரூ ஒரு லட்சத்து 50 ஆயிரத்து ஏலம் போனது.
இது கடந்த எந்த ஆண்டிலும் இல்லாத ஒன்று ரூ. 77 ஆயிரத்திற்கு அதிகம் ஏலம் போனது இல்லை இந்த வெள்ளோடு வாரச்சந்தை ஏலத்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
ஈரோடு அடுத்த வடமுகம் வெள்ளோட்டில் உள்ள சல்லிமேடு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் திருமலை .இவரது மனைவி சுண்டைக்காரம்மா என்ற பொன்னழகி (வயது 75). திருமலை இறந்து 3 வருடம் ஆகிறது.
பொன்னழகி அங்குள்ள ஒரு டாக்டான் விவசாய தோட்டத்தை கவனித்து வந்தார். மேலும் சுண்டைக்காய் வியாபாரமும் செய்து வந்தார்.
இவரது மகன் அம்மாசை , கட்டிட தொழிலாளி. இவரதுமகள் சந்திரா (வயது 22). இவருக்கு திருமணமாகி கணவருடன் வாழாமல் தனது தந்தையின் வீட்டுக்கு வந்து விட்டார்.
இது தொடர்பாக சந்திராவுக்கும் அவரது பாட்டி பொன்னழகிக்கும் தகராறு இருந்து வந்தது. கணவனுடன் ஒழுங்காக குடும்பம் நடத்தாமல் இப்படி இங்கு வந்து விட்டாயே... என்று பாட்டி சத்தம் போட்டு கொண்டு வந்தாராம்.
இது தொடர்பாக நேற்றும் அவர்களிடையே தகராறு ஏறபட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சந்திரா கல்லை எடுத்து பாட்டி பொன்னழகியின் தலையில் போட்டார்.
இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த பொன்னழகி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். பேத்தி அங்கிருந்து ஓடி விட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஞானப்பிரகாசம் (அரச்சலூர்), மகாலிங்கம் (சென்னிமலை ) ரவி (மலையம்பாளையம்) ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் துப்பறியும் நாய் வீராவும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. பாட்டி பொன்னழகியின் உடலை மோப்பம் பிடித்த நாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடியது.
விசாரணை முடிந்ததும் பொன்னழகியின் உடல் பிரேத பாசோதனைக்கு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவை தேடி வருகிறார்கள்.
பாட்டி தலையில் கல்லை தூக்கி போட்டு பேத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, குடிநீர் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மொத்தம் 317 மனுக்கள் குவிந்தது.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், தனித்துணை கலெக்டர் ராதாமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியம் உள்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குறைகள் இருந்தால் சொல்லுங்க...
நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மின் கோட்ட (நகரியம்) அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு குறைகளை கேட்கிறார். இதனால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்தமிழர் பேரவை கூட்டத்தில்
சுத்தமான குடி தண்ணீர் வழங்க வேண்டுகோள்
ஈரோடு தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வீரகோபால் தலைமையில் நடந்தது. பேரவை நிதிச் செயலாளர் பெருமாவளவன், வக்கீல் ஆனந்தன், வீரவேந்தன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ஊதியத் தொகையாக ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும். துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான குடி தண்ணீர் வழங்க வேண்டும் போன்ற தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ளது.கடம்பூர் வனப்பகுதி இந்த வனப்பகுதி அருகே உள்ள வனக்கிராமம் தொண்டூர்.
இந்த ஊரையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. காட்டிலிருந்து சுமார் 4 வயது நிரம்பிய ஒரு கரடிகுட்டி ஊருக்குள் புகுந்தது.
வழிதவறி ஊருக்குள் புகுந்த இந்த கரடி குட்டி ஊரையொட்டி உள்ள ஒரு குட்டைபகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
இதனைகண்ட அப்பகுதி மக்கள் அந்த கரடி குட்டியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த கரடி குட்டி பொதுமக்கள் விரட்டியும் காட்டுக்குள் போக மறுத்து அங்கேயே படுத்து கொண்டது.
இதனால் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் தொண்டூர் கிராமத்துக்கு விரைந்தனர்.
அங்கு வழிதவறி ஊருக்குள் புகுந்த கரடி குட்டியை காட்டுக்குள் விரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த கரடி குட்டியை வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் மற்றும் பால் குடங்கள் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
மதியம் அபிஷேகமும் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) அக்னி கபாலம் எடுத்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
வெள்ளிக்கிழமை காலை முக்கிய விழாவான குண்டம் விழா நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிக்கிறார்கள். அன்றும் பொங்கல் வைத்து வழிபாடும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.






