என் மலர்
செய்திகள்

அரச்சலூர் அருகே வடமாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
அரச்சலூர் அருகே வடமாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரச்சலூர்:
ஒடிசா மாநிலம் பாடெர்க் மாவட்டம் சபரங் கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரஜனா. இவரது மகன் லிப்பன்ஜனா (வயது20). இவர் கடந்த 1½ ஆண்களாக ஈரோடு மாவட்டம் அரச்சலூரை அடுத்த வேப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் லிப்பன் ஜனா அவரது தாய்க்கு போன் செய்து ஊருக்கு வருவதாக சொன்னதாகவும், அதற்கு அவரது தாய் இப்போது ஊருக்கு வர வேண்டாம். அக்காவின் திருமணத்திற்கு வந்தால் போதும் என்று கூறியுள்ளார்.
இதனால் லிப்பன்ஜனா மனவேதனையில் இருந்து உள்ளார். சம்பவத்தன்று அவர் வேலை முடிந்து அறையில் இருந்தார். பின்னர் அவரது நண்பர் அலேக்தாஸ் என்பவர் பணியை முடித்து வந்த போது லிப்பன்ஜனா தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அலேக்தாஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து லிப்பன் ஜனாவை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். லிப்பன்ஜனாவை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த தகவலை லிப்பன்ஜினா பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story